ரொனால்டோ சென்ற இடமெல்லாம் சிறப்பு

ரொனால்டோ சென்ற இடமெல்லாம் சிறப்பு

1 mins read
3ef5d530-ba2f-4358-a1cf-09061d0afa9f
(படம்: ஏஎஃப்பி) -

டூரின்: நட்சத்திர காற்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல்களை அடிக்க, ஃபியோரென்டினா குழுவை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இத்தாலிய காற்பந்து லீக்கில் தனது முதலிடத்தை வலுவாக்கிக் கொண்டது யுவென்டஸ் குழு. இதனுடன் சேர்த்து, தொடர்ந்து ஒன்பது ஆட்டங்களாக கோல் அடித்துள்ளார் ரொனால்டோ. இதன்மூலம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி தொடர்ந்து கோல் வேட்டையாடிய முதல் யுவென்டஸ் வீரர் என்ற பெருமையை அவர் தேடிக்கொண்டார். 2018ல் அந்தக் குழுவில் சேர்ந்த அவர் இதுவரை 70 ஆட்டங்களில் 50 கோல்களை அடித்திருக்கிறார்.