உலக டென்னிஸ் தரவரிசையில் முதலிடம் பிடித்த ஜோகோவிச்

மெல்பர்ன்: உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தரவரிசைப்பட்டியலை அனைத்து டென்னிஸ் சங்கம் வெளியிட்டுள்ளது. அதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில், ஆஸ்திரேலியப் பொது விருதில் கிண்ணத்தை எட்டாவது முறையாக ஏந்திய செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் (9,720 புள்ளிகள்) இரண்டாவது இடத்தில் இருந்து முன்னேறி மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

32 வயது ஜோகோவிச் ஐந்தாவது முறையாக முதல் இடத்துக்கு முன்னேறி இருக்கிறார். அவர் 276வது வாரமாக முதல் இடத்தை வகிக்கிறார். இதன் மூலம் முதல் இடத்தை அதிக வாரங்கள் வகித்த வீரர்கள் பட்டியலில் ஜோகோவிச் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இந்த வகையில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் (310 வாரங்கள்) முதலிடத்திலும் அமெரிக்க முன்னாள் வீரர் பீட் சாம்பிராஸ் (286 வாரங்கள்) இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஆஸ்திரேலியப் பொது விருதுப் போட்டியின் காலிறுதியில் டொமினிக் திம்மிடம் தோல்வி கண்ட ஸ்பெயின் வீரர் ரஃபயேல் நடால் (9,395 புள்ளிகள்) முதலிடத்தில் இருந்து இரண்டாவது இடத்துக்குச் சரிந்துள்ளார். அரையிறுதியில் தோல்வி கண்ட சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் (7,130 புள்ளிகள்) மூன்றாவது இடத்தில் நீடிக்கிறார்.

இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்த ஆஸ்திரியா வீரர் டொமினிக் திம் (7,045 புள்ளிகள்) ஓர் இடம் ஏற்றம் கண்டு நான்காவது இடத்தைப் பிடித்துள்ளார். நான்காவது சுற்றில் தோல்வி கண்ட ர‌ஷ்ய வீரர் டேனில் மெட்விடேவ் (5,960 புள்ளிகள்) ஓர் இடம் சறுக்கி ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளார்.

கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் (4,745 புள்ளிகள்) ஆறாவது இடத்திலும் ஜெர்மனி வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (3,885 புள்ளிகள்) ஏழாவது இடத்திலும் இத்தாலி வீரர் மாட்டோ பெர்ரெட்டினி (2,905

புள்ளிகள்) எட்டாவது இடத்திலும் தொடர்கின்றனர். பிரான்ஸ் வீரர் மான்பில்ஸ் (2,700 புள்ளிகள்) ஓர் இடம் முன்னேறி ஒன்பதாவது இடத்தையும் பெல்ஜியம் வீரர் டேவிட் கோபின் (2,555 புள்ளிகள்) ஓர் இடம் ஏற்றம் கண்டு பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இந்திய வீரர்கள் பிரஜ்னே‌‌ஷ் குணேஸ்வரன் ஓர் இடம் முன்னேறி 122வது இடத்தையும் சுமித் நாகல் ஆறு இடங்கள் உயர்ந்து 125வது இடத்தையும் ராம்குமார் இரண்டு இடங்கள் முன்னேறி 182வது இடத்தையும் வகிக்கின்றனர்்.

இரட்டையர் பிரிவில் இந்திய வீரர்கள் ரோகன் போபண்ணா இரண்டு இடங்கள் சறுக்கி 40வது இடத்தைப் பிடித்துள்ளார். திவிஜ் சரண் 53வது இடத்திலும் புரவ் ராஜா 91வது இடத்திலும் தொடர் கின்றனர்.

பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஆஸ்திரேலியப் பொது அரையிறுதியில் தோல்வி கண்ட ஆஸ்திரேலிய வீராங்கனை ஆ‌‌ஷ்லி பார்ட்டி (8,367 புள்ளிகள்) முதல் இடத்தில் நீடிக்கிறார். அரையிறுதியில் தோற்ற ருமேனிய வீராங்கனை சிமோனா ஹாலெப் (6,101 புள்ளிகள்) மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறார்.

மூன்றாவது சுற்றில் தோல்வி கண்ட செக் குடியரசு வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (5,290 புள்ளிகள்) ஓர் இடம் சரிந்து மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளார். உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினா (4,775 புள்ளிகள்) ஓர் இடம் உயர்ந்து நான்காவது இடத்தையும் சுவிட்சர்லாந்து வீராங்கனை பெலின்டா பென்சிச் (4,675 புள்ளிகள்) இரண்டு இடங்கள் முன்னேறி ஐந்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!