கிண்ணம் வெல்ல மல்லுக்கட்டும் இந்தியா-பங்ளாதேஷ் அணிகள்

1 mins read

போட்செஃப்ஸ்ட்ரூம்: தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் நாளை நடக்கவிருக்கும் இறுதி ஆட்டத்தில் இந்தியா, பங்ளாதேஷ் அணிகள் பலப்பரிட்சை நடத்த இருக்கின்றன.

இவ்விரு அணிகளுமே முந்தைய சுற்று ஆட்டங்களில் ஒருமுறைகூட தோல்வி கண்டதில்லை.

மும்பையைச் சேர்ந்த 18 வயது தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாச, பரம எதிரியான பாகிஸ்தானை பத்து விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அரையிறுதியில் வென்றது.

அடுத்த ஐபிஎல் டி20 தொடருக்கான ஏலத்தில் யஷஸ்வியை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2.4 கோடி ரூபாய்க்கு வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்து அணிக்கெதிரான இன்னோர் அரையிறுதி ஆட்டத்தில் பங்ளாதேஷ் அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதலில் பந்தடித்த நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 211 ஓட்டங்களை எடுத்தது. மஹ்முதுல் ஹசன் ராய் நூறு ஓட்டங்களைக் குவிக்க, 44.1 ஓவர்களிலேயே பங்ளாதேஷ் அணி இலக்கை எட்டியது.