சூதாட்டம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்குச் சிறை

சூதாட்டம்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரருக்குச் சிறை

1 mins read
f6215cfd-7c5b-41b4-a7c7-cfd2b5b4d795
பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் நசீர் ஜம்ஷெட். படம்: ஊடகம் -

மான்செஸ்டர்: பாகிஸ்தான் கிரிக்கெட் லீக் (பிஎஸ்எல்) டி20 போட்டி ஒன்றில் 'ஸ்பாட் ஃபிக்சிங்' சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றத்திற்காக அந்நாட்டு வீரர் நசீர் ஜம்ஷெட்டுக்கு (படம்) மான்செஸ்டர் நீதிமன்றம் 17 மாதச் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தது.

துபாயில் 2018 பிப்ரவரி மாதம் இஸ்லாமாபாத் யுனைடெட் - பெஷாவர் ஸல்மி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின்போது 30,000 பவுண்டு பணத்திற்காக சக வீரர்களைச் சூதாட்டத்தில் ஈடுபடும்படி ஊக்குவித்ததை ஜம்ஷெட் ஒப்புக்கொண்டார்.

இந்தக் குற்றத்தைப் புரியும்படி ஜம்ஷெட்டைத் தூண்டிய யூசுஃப் அன்வர், முகம்மது இஜாஸ் ஆகிய இருவருக்கும் முறையே 40 மாதங்களும் 30 மாதங்களும் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அவ்விருவரும் பிரிட்டிஷ் குடிமக்கள். இதே காரணத்திற்காக பாகிஸ்தான் கிர்க்கெட் வாரியம் கடந்த ஆண்டு ஜம்ஷெட்டுக்குப் பத்தாண்டு காலம் கிரிக்கெட் விளையாடத் தடை விதித்தது நினைவு கூரத்தக்கது.