கிருமித்தொற்று: ஆசியர்களைக் கிண்டல் செய்த காற்பந்து வீரர்

கிருமித்தொற்று: ஆசியர்களைக் கிண்டல் செய்த காற்பந்து வீரர்

1 mins read

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துக் குழுக்களில் ஒன்றான டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்சின் முன்னணி வீரர்களில் ஒருவரான டெலி அலி தமது 'ஸ்னாப்சாட்' சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட காணொளியால் சர்ச்சையில் சிக்கினார். கொரோனா கிருமித்தொற்றால் ஆசிய நாடுகளே அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், டெலி அலி வெளியிட்ட காணொளி ஆசியர்களைக் கிண்டல் செய்யும் விதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் தமது தவற்றை உணர்ந்த அவர், உடனடியாக அதனை நீக்கிவிட்டார். அந்தச் செயலால் தனக்கும் தமது குழுவிற்கும் தலைக்குனிவை ஏற்படுத்திவிட்டதாகக் கூறிய அலி, அதற்காக மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.