ஐசிசி கனவு அணியில் இந்திய வீரர்கள் மூவர்

1 mins read

துபாய்: அண்மையில் தென்னாப்பிரிக்காவில் நடந்து முடிந்த பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி இறுதி வரை முன்னேறியும் கிண்ணத்தைத் தக்கவைக்கத் தவறியது. இறுதிப் போட்டியில் அண்டை நாடான பங்ளாதேஷிடம் அந்த அணி மூன்று விக்கெட் வித்தியாசத்தில் தோற்றுப்போனது.

இந்நிலையில், உலகக் கிண்ணப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்ட வீரர்களைக் கொண்டு கனவு அணியை அறிவித்து இருக்கிறது அனைத்துலக கிரிக்கெட் மன்றம் (ஐசிசி). அதில், தொடரில் அதிக ஓட்டங்களைக் குவித்த யஷஸ்வி ஜெய்ஷ்வால், அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய ரவி பிஷ்னோய் உட்பட இந்திய வீரர்கள் மூவருக்கு இடம் கிடைத்துள்ளது. மூன்றாமவர் வேகப் பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி.

யு19 உலகக் கிண்ண கனவு அணி: யஷஸ்வி ஜெய்ஷ்வால், ரவி பிஷ்னோய், கார்த்திக் தியாகி (மூவரும் இந்தியா), அக்பர் அலி (அணித்தலைவர் , விக்கெட் காப்பாளர்), ஷகாதத் ஹொசைன், மஹ்முதுல் ஹசன் ஜோய் (மூவரும் பங்ளாதேஷ்), நியீம் யங், ஜேடன் சீல்ஸ் (இருவரும் வெஸ்ட் இண்டீஸ்), இப்ராகிம் ஸத்ரான், ஷஃபிகுல்லா கஃபாரி (இருவரும் ஆப்கானிஸ்தான்), ரவிந்து ரசந்த (இலங்கை). 12வது ஆட்டக்காரர் - அகில் குமார் (கனடா).