காற்பந்து நடுவருக்கு ஓராண்டு தடை

1 mins read
1616f7b9-772d-445b-8904-d2788ed7c3a6
கோல் காப்பாளரைத் தலையில் மோதித் தாக்கியதற்காக இத்தாலிய காற்பந்து நடுவர் ஒருவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது. கோப்புப்படம்: ஊடகம் -

பொறுமையிழந்து கோல் காப்பாளரைத் தலையில் மோதித் தாக்கியதற்காக இத்தாலிய காற்பந்து நடுவர் ஒருவருக்கு ஓராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1ஆம் தேதி இத்தாலியில் நடந்த உள்ளூர்ப் போட்டியில் போர்கோ மோக்லினோ குழுவும் மோடோடோனே குழுவும் மோதின.

இதில் நடுவர் ரெஃப்ரி ஆன்டனியோ மார்ட்டினெல்லோ, போர்கோ மோக்லினோவின் கோல்காப்பாளர் மடீசோ சிசிடோலிவை ஆட்டத்தில் இருந்து வெளியேற்றினார்.

அதன் பிறகு ஓய்வறையில், நடுவரிடம் கோல் காப்பாளர் விளக்கம் கேட்க முயன்றபோது, அவர்களிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது நடுவர் தலையில் முட்டியதால் கோல்காப்பாளருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. காயங்களுக்கு சிகிச்சையளிக்க அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.