மும்பை: இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் இரு நாடுகளுக்குமிடையில் கிரிக்கெட் போட்டி நடைபெறுவதில்லை. ஆனால் சில வீரர்கள் போட்டி நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் இருநாட்டு கிரிக்கெட் தொடரை நடத்தக்கூடாது என்று இந்திய முன்னாள் வீரர் சேத்தன சவுகான் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் ''தற்போதைய நிலையில் இருநாட்டு கிரிக்கெட் தொடர் நடக்கக் கூடாது. இருநாடுகளுக்கும் இடையிலான உறவு சரியில்லை. பாகிஸ்தானில் விளையாடுவது பாதுகாப்பானது அல்ல. உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு கிரிக்கெட் விளையாட முடியாது,'' என்றார்.
'இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் தொடர் நடத்தக்கூடாது'
1 mins read

