சுடச் சுடச் செய்திகள்

நான் நலமாக உள்ளேன்: மகனின் கூற்றை மறுக்கும் காற்பந்து சகாப்தம் பெலே

ரியோ டி ஜெனிரோ: பிரேசிலின் முன்னாள் காற்பந்து வீரர் பெலே மனஅழுத்தத்தில் உள்ளார் என்ற தன் மகனின் கூற்றை மறுத்துள்ளார். மேலும் தான் நலமுடன் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

பெலேவின் மகன் எடின்ஹோ கடந்த திங்கட்கிழமை அளித்த பேட்டியொன்று குளோபில் வெளியானது. அதில் தனது இடுப்பு உபாதை  காரணமாக மனஅழுத்தத்தில் உள்ள பெலே, வீட்டைவிட்டு வெளியே வர தயங்குவதாகத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நான் நலமாக இருக்கிறேன். உடல் ரீதியாக ஏற்படும் சிரமங்களை நான் ஏற்றுக்கொள்ள பழகிவிட்டேன்.

“என் வயதைத்யொத்தவர்களுக்கு இந்த சிரமங்கள் வழக்கமான ஒன்றுதான்.

நான் பயப்படவில்லை, மன

உறுதியோடும் நம்பிக்கையோடும் நான் என் வேலைகளைச் செய்து வருகிறேன்,” என்று தெரிவித்துள்ளார்.

வரும் அக்டோபரில் 80 வயதை எட்டும் அவர், வெளிப்புற நிகழ்ச்சிகளுக்கு வரும் போது சக்கர நாற்காலியில் சென்றாலும், தன் வாழ்க்கையை ஆவணப்படமாக்கும் பணியில் இயக்குநருடன் ஒத்துழைப்பதாகவும் அவரது நண்பர்கள் கடந்த ஜனவரி மாதம் குறிப்பிட்டிருந்தனர்.

தன்னுடைய காற்பந்து வரலாற்றில் மூன்று முறை உலகக் கிண்ணக் காற்பந்துப் பட்டத்தை வென்றுள்ளார் பெலே.
 

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு $4.90 மட்டுமே!
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை வாசிக்க... >>
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon