சாம்பியன்ஸ் லீக்: தோல்விக்குப் பின் லிவர்பூல் நிர்வாகி காட்டம்

மட்ரிட்: சாம்பியன்ஸ் லீக் காற்பந்து காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் அட்லெட்டிகோ மட்ரிட் குழு 1-0 என்ற கோல் கணக்கில் நடப்பு வெற்றியாளரான லிவர்பூல் குழுவைத் தோற்கடித்தது.

ஆனாலும், ஆட்ட முடிவால் தாம் தளர்ந்து போகவில்லை என்ற லிவர்பூல் நிர்வாகி யர்கன் கிளோப், “ஆன்ஃபீல்ட் விளையாட்டரங்கிற்கு வாருங்கள், அச்சுறுத்தல் என்னவென்பதை உணர்வீர்கள்,” என்று எதிரணி ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“ஆட்டத்தின் முடிவு என்னை எந்த விதத்திலும் பாதிக்கவில்லை. அட்லெட்டிகோவிற்கு வேண்டும் எனில் இது பெரிய வெற்றியாக இருக்கலாம். அதனால் மட்ரிட் விளையாட்டரங்கில் பல மகிழ்ச்சியான முகங்களைப் பார்க்க முடிகிறது. ஆயினும், மோதல் இன்னும் முடிந்துவிடவில்லை. எங்களது ஆன்ஃபீல்ட் அரங்கில் நடக்கவுள்ள இரண்டாவது ஆட்டத்திற்காகக் காத்திருக்கிறேன்,” என்றார் கிளோப்.

மட்ரிட் நகரின் ‘வாண்டா மெட்ரோபொலிட்டானா’ அரங்கில் நடந்த இந்த ஆட்டத்தின் நான்காவது நிமிடத்திலேயே அட்லெட்டிகோ குழு முன்னிலை பெற்றது. ‘நாக் அவுட்’ ஆட்டங்களில் எல்லாம் கோலடிப்பதை வாடிக்கையாகக் கொண்டுள்ள அட்லெட்டிகோவின் சௌல் நீகெஸ் இம்முறையும் அதை நிகழ்த்திக் காட்டத் தவறவில்லை.

லிவர்பூல் கோல்காப்பாளர் அலிசன் பெக்கர் இவ்வாண்டில் விட்டுக்கொடுத்த இரண்டாவது கோல் இதுதான்.

ஆனாலும், கிளோப் நிர்வாகியாகப் பொறுப்பேற்றபின் இரண்டு ஆட்டங்கள் கொண்ட எந்தவொரு சுற்றிலும் லிவர்பூல் தோற்றதில்லை என்பதால் அடுத்த மாதம் 11ஆம் தேதி நடக்கவிருக்கும் இரண்டாவது ஆட்டத்தில் அட்லெட்டிகோவை லிவர்பூல் புரட்டியெடுக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!