கோல் அடிப்பதில் மன்னன்

டோர்ட்மண்ட்: நட்சத்திர ஆட்டக்காரர் நெய்மார் ஒரு கோல் அடித்தும் பாரிஸ் செயின்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி) குழுவால் ஜெர்மனியின் பொருஸியா டோர்ட்மண்ட் குழுவை வீழ்த்த முடியாமல் போனது. டோர்ட்மண்ட் குழுவிற்காக விளையாடி வரும் 19 வயது நார்வே ஆட்டக்காரர் எர்லிங் பிரௌட் ஹோலாண்ட் (படம்) இரு கோல்களைப் போட்டதே அதற்குக் காரணம்.

இதனால் சாம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முந்திய சுற்றின் முதல் ஆட்டத்தில் டோர்ட்மண்ட் குழு 2-1 என வென்று, முன்னிலை பெற்றது.

கடந்த மாதம் டோர்ட்மண்ட் குழு சார்பில் தான் களமிறங்கிய முதல் ஆட்டத்திலேயே ஹாட்ரிக் கோலடித்து சாதனை படைத்த ஹோலாண்ட், இன்னும் தமது கோல் வேட்டையை நிறுத்தவே இல்லை. அக்குழுவிற்காக இதுவரை ஏழு ஆட்டங்களில் விளையாடியுள்ள இவர், 11 கோல்களைப் போட்டுள்ளார்.

அதேபோல, சாம்பியன்ஸ் லீக்கிலும் இதுவரை ஏழு ஆட்டங்களில் மட்டுமே விளையாடியுள்ளபோதும் பத்து கோல்களைப் புகுத்தியுள்ளார் ஆறு அடி நான்கு அங்குலம் உயரமுள்ள இந்த இளம் ஆட்டக்காரர்.

ஆனாலும், தன்னடக்கத்துடனேயே இவர் பேசுகிறார். பலமிக்க பிஎஸ்ஜியை தன் சொந்த அரங்கில் வீழ்த்தியபோதும் இரண்டாவது ஆட்டத்தில் மீண்டெழும் திறன் படைத்த, அபாயகரமான குழு பிஎஸ்ஜி என்கிறார் இவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!