கார்டியோலா: சிட்டி குழுவில் நீடிப்பேன்

மான்செஸ்டர்: மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவில் தான் தொடர்ந்து நீடிப்பது உறுதி என்று கூறியுள்ளார் அதன் நிர்வாகி பெப் கார்டியோலா.

விளம்பர வருவாய் நிதி முறைகேடு காரணமாக ஐரோப்பிய காற்பந்துப் போட்டிகளில் விளையாட மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழுவுக்கு கடந்த வாரம் ஈராண்டு தடைவிதிக்கப்பட்டது.

இதையடுத்து, அதன் நிர்வாகி பெப் கார்டியோலா பதவி விலகக்கூடும் என்று கிளம்பிய யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அவர் பதிலளித்துள்ளார்.

சிட்டியுடனான கார்டியோலாவின் ஒப்பந்தம் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை உள்ளது.

நேற்று அதிகாலை நடந்த இபிஎல் ஆட்டமொன்றில் வெஸ்ட் ஹேம் குழுவை 2-0 என சிட்டி வென்றது.

இந்த ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த கார்டியோலா, "அவர்களாக என்னை பதவியில் இருந்து நீக்காத வரையில், நான் குழுவில் நீடிப்பது 100 விழுக்காடு உறுதி.

“சிட்டி குழுவில் நான் தொடர்ந்து நீடிக்க விரும்புகிறேன். ஏனெனில் அது ஒப்பந்தத்தையும் தாண்டிய சிறப்பான ஒன்று. நான் முன்பும் சொன்னேன், இப்போதும் சொல்கிறேன். நான் இங்கிருந்து குழுவிற்கு உதவ விரும்புகிறேன்.

“என்னால் முடிந்தவரை குழுவின் தற்போதைய நிலையை தக்க வைக்க விரும்புகிறேன்.

“அடுத்த மூன்று மாதங்களுக்கு நாங்கள் என்ன செய்ய வேண்டுமோ அதில் கவனம் செலுத்துவோம். மற்றதை அதன் பிறகு பார்த்துக் கொள்ளலாம்,” என்றார்.

தடை குறித்து பேசிய அவர், “மேல் முறையீடு செய்வோம். சரியானதைத்தான் செய்தோம் என்று நம்பும்போது அதற்காக போராட வேண்டும். உண்மை வெல்லும்,” என்று அவர் சொன்னார்.

தடை விதிக்கப்பட்ட பிறகு தனது முதல் ஆட்டத்தில் விளையாடிய மேன்சிட்டி, நேற்று

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!