யூரோப்பா லீக் காற்பந்து: இங்கிலிஷ் குழுக்கள் முன்னிலை

லண்டன்: ெபல்ஜிய நாட்டின் புருகஸ் என்ற குழுவுடன் நேற்று அதிகாலை மான்செஸ்டர் யுனைடெட் குழு மோதிய யூரோப்பா லீக் காற்பந்து ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலை கண்டது. இந்தப் போட்டியில் யுனைடெட் குழு ஏனோதானோ என விளையாடியதாக அதன் நிர்வாகி ஒலே குனார் சோல்சியார் குறிப்பிட்டார்.

ஆட்டத்தின் 15ஆம் நிமிடத்தில் புருகஸ் குழுவின் டென்னிஸ் போட்ட கோலுக்கு ஈடாக யுனைடெட்டின் ஆன்டனி மார்சியால் 36ஆம் நிமிடத்தில் கோல் போட்டு ஆட்டத்தைச் சமனுக்குக் கொண்டு வந்தார்.

ஆட்டத்திற்குப் பின் பேசிய சோல்சியார், “யுனைடெட் சிறப்பாக விளையாடிய ஆட்டங்களில் இதுவும் ஒன்று எனச் சொல்ல முடியாது. கடினமான சூழலில் நன்கு ஒருங்கிணைந்து செயல்பட்ட அணிக்கு எதிராக விளையாடிய சிரமமான ஆட்டம் இது.

“எதிரணியின் மைதானத்தில் விளையாடி ஒரு கோல் போட்டு, ஆட்டத்தைச் சமநிலை செய்துள்ளோம். அடுத்த வாரம், பிப்ரவரி 27ஆம் தேதி, சொந்த மைதானத்தில் மீண்டும் விளையாட உள்ளோம். அதில் வென்று அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவோம் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம்,” என்று கூறினார்.

ஆட்டத்தின் பெரும் பகுதியில் வீரர்கள் கனமழை, பலத்த பருவக்காற்றை எதிர்கொண்டு விளையாட வேண்டியிருந்ததாக பிபிசி செய்தித் தகவல் தெரிவிக்கிறது. அத்துடன், யூரோப்பா லீக் ஆட்டங்களில் பயன்படுத்தப்படும் பந்து பிரிமியர் லீக்கில் பயன்படுத்தப்படுவதிலிருந்து வித்தியாசமாக உள்ளதாக சோல்சியார் கருத்துக் கூறியுள்ளார்.

“நீங்கள் வேண்டுமானால் வீரர்களைக் கேட்டுப் பார்க்கலாம். இந்தப் பந்தைக் கொண்டு விளையாடுவது எளிதல்ல. இது ஏதோ வித்தியாசமாக உள்ளது; விளையாட கடினமாக உள்ளது. ஆனால், இது இரண்டு குழுக்களுக்குமே பொருந்தும்,” என்று அவர் அங்கலாய்த்தார்.

மற்றோர் ஆட்டத்தில் இங்கிலாந்தின் உல்வ்ஸ் குழு ஸ்பெயினின் எஸ்பான்யோல் குழுவை 4-0 என போட்டுத் தள்ளியது. இதில் டியோகோ ஜோட்டா என்ற வீரர் மூன்று கோல்கள் போட்டு அசத்தினார். உல்வ்சின் மற்றொரு கோலை ரூபன் நிவஸ் போட்டார்.

இந்த வெற்றியைத் தொடர்ந்து உல்வ்ஸ் குழுவின் நிர்வாகியான நுனோ எஸ்பிரிட்டோ சான்டோ தமது குழு யூரோப்பா லீக் விருது வெல்லும் கனவில் ரசிகர்கள் திளைக்கத் தொடங்கிவிடுவர் என்று கருத்துத் தெரிவித்தார்.

வேறோர் ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆர்சனல் குழு, கிரீசின் ஒலிம்பியாக்கோஸ் குழுவை 1-0 என்று வீழ்த்தியது. ஆர்சனலின் கோலை லக்கசெட் போட்டு வெற்றி தேடித் தந்தார். இதன்மூலம் பல ஆட்டங்களில் கோல் போடாதிருந்த நிலையை லக்கசெட் சரிசெய்து இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!