ஐபிஎல்லுக்குப் பிறகு நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் போட்டி

ஐபிஎல்லுக்குப் பிறகு நட்சத்திர வீரர்கள் பங்கேற்கும் போட்டி

1 mins read

புதுடெல்லி: இந்தியாவில் ஆண்டுதோறும் இடம்பெறும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 29ஆம் தேதி முதல் மே 24ஆம் தேதி வரை நடக்கவுள்ளன.

அப்போட்டிகள் முடிந்ததும் தொடரில் சிறப்பாக ஆடிய வீரர்கள் பங்கேற்கும் ஒரே ஒரு நட்சத்திரப் போட்டியை நடத்த ஐபிஎல் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. அந்த ஆட்டம் இடம்பெறும் நாள், அரங்கம் ஆகியவை குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

ஆயினும், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் அடுத்த வாரம் அதிகாரபூர்வமாக திறந்து வைக்க இருக்கும் குஜராத் மாநிலம், அகமதாபாத் நகரின் மோட்டெரா விளையாட்டரங்கில் நட்சத்திர வீரர்கள் பங்குபெறும் அந்த ஆட்டம் இடம்பெற அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.