மெஸ்ஸியின் அதிரடி ஆட்டம்; பார்சா வெற்றி

மெஸ்ஸியின் அதிரடி ஆட்டம்; பார்சா வெற்றி

1 mins read
8ed8f631-ac01-44da-ba36-d97a8266bef8
நேற்று முன்தினம் நடந்த ஸ்பானிய காற்பந்தாட்டது லீக் ஆட்டத்தில் பார்சிலோனா குழுவின் அர்ஜெண்டின வீரர் லயனல் மெஸ்ஸி (வலது) அடித்த பந்து கோலாகாமல் ஐபர் குழுவின் செர்பிய கோல் காப்பாளர் தடுக்கப்பார்க்கிறார். லயனல் மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால் ஐபர் குழுவை 5-0 எனும் கோல் கணக்கில் பார்சிலோனா வீழ்த்தியது. படம்: ஏஎஃப்பி/ ஜோசப் லாகோ -

பார்சிலோனா: நட்சத்திர வீரர் லயனல் மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற ஸ்பானிய காற்பந்து லீக் ஆட்டம் ஒன்றில் ஐபர் குழுவை 5-0 எனும் கோல் கணக்கில் பார்சிலோனா அமோக வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் நான்கு கோல்களுக்குச் சொந்தக்காரராக மெஸ்ஸி விளங்கினார். தற்போது லீக் பட்டியலில் பார்சிலோனா முன்னிலை வகிக்கிறது.