டெஸ்ட் கிரிக்கெட்: புஜாரா, கோஹ்லி மீண்டும் சறுக்கல்

டெஸ்ட் கிரிக்கெட்: புஜாரா, கோஹ்லி மீண்டும் சறுக்கல்

1 mins read
424bdc8d-fd61-423e-97d3-319b5d944e06
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று பிருத்வி ஷா, புஜாரா, விராத் கோஹ்லி ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

வெல்லிங்டன்: நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி 4 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களை எடுத்துள்ளது.

இப்போட்டியின் மூன்றாவது நாளான நேற்று முதல் இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணி, மேலும் 132 ஓட்டங்களை சேர்த்து, 348 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தது.

இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக இசாந்த் சர்மா 5 விக்கெட்டுகளைச் சாய்த்தார்.

இதன் பின்னர் 183 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், இரண்டாவது இன்னிங்சை இந்திய அணி தொடர்ந்தது.

பிருத்வி ஷா, புஜாரா, விராத் கோஹ்லி ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். மயங்க் அகர்வால் நிலைத்து நின்று அரை சதம் கடந்த நிலையில் 58 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 39 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில், 4 விக்கெட் இழப்புக்கு 144 ஓட்டங்களை இந்திய அணி சேர்த்திருந்தது. ரகானேயும் விகாரியும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இன்றைய நான்காவது நாள் ஆட்டத்தில் ரகானே-விகாரி இணை சிறப்பாக விளையாடி 100 ஓட்டங்களுக்கு மேல் குவித்து ரிஷப் பண்ட், அஸ்வின் பொறுப்புடன் விளையாடினால் இந்திய அணி போராட வாய்ப்புள்ளது.