வெலிங்டன்: நியூசிலாந்து-இந்தியா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெலிங்டன் மைதானத்தில் நடைபெற்றது.
பூவா தலையாவில் வென்ற நியூசிலாந்து முதலில் பந்துவீச முடிவெடுத்தது
அதன்படி, இந்திய அணி முதலில் பந்தடித்தது. இந்திய அணி 165 ஓட்டங்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. அது தனது முதல் இன்னிங்சில் 348 ஓட்டங்கள் குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்தியா சார்பில் இஷாந்த் சர்மா 5 விக்கெட்டு களையும் அஸ்வின் 3 விக்கெட்டு களையும் பும்ரா, ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
பின்னர் 183 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி மூன்றாவது நாள் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டு கள் இழப்பிற்கு 144 ஓட்டங்கள் எடுத்தது. ரகானே 25 ஓட்டங்
களுடனும் விஹாரி 15 ஓட்டங்
களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நான்காவது நாள் ஆட்டம் தொடங்கியது. போட்டி தொடங்கியது முதலே ஆதிக்கம் செலுத்திய நியூசிலாந்து அணியின் பந்துவீச்
சாளர்கள் இந்திய வீரர்களின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து வீழ்த்தினர். இதனால் இந்திய அணி தனது இரண்டாவது இன்னிங்சில் 191 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இதன் மூலம் நியூசிலாந்து அணியைவிட இரண்டாவது இன்னிங்சில் வெறும் 8 ஓட்டங்கள் மட்டுமே இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது. சிறப்பாகப் பந்துவீசிய நியூசிலாந்து அணியின் சவுத்தி 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 9 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி 1.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் இந்திய அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி இமாலய வெற்றி பெற்றுள்ளது.
இப்போட்டியில் சிறப்பாகப்
பந்துவீசிய நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி ஆட்ட நாயகன் விருதைத் தட்டிச்சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் நியூசிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. கடைசி டெஸ்ட் போட்டி வரும் 29ஆம் தேதி நடைபெறுகிறது.

