காலிறுதியில் மேன்சிட்டி, லெஸ்டர்

காலிறுதியில் மேன்சிட்டி, லெஸ்டர்

1 mins read
abb36cf5-5831-4ff7-a997-1c3743305fe4
நேற்றுமுன்தினம் (4-6-2020) அதிகாலை நடந்த ஆட்டத்தில் ஷெஃபீல்டு வென்ஸ்டே குழுவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு. படம்: ஏஎப்பி -

லண்டன்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் பட்டம் கைவிட்டுப்போவது பெரும்பாலும் உறுதியாகிவிட்ட நிலையில் மான்செஸ்டர் சிட்டி காற்பந்துக் குழு மற்ற கிண்ணங்களுக்குக் குறிவைத்துள்ளது.

அவற்றுள் முதலாவதாக கடந்த வாரம் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றிய மேன்சிட்டியின் அடுத்த இலக்கு எஃப் ஏ கிண்ணம். அதற்கேற்ப, நேற்று அதிகாலை நடந்த ஆட்டத்தில் அக்குழு ஷெஃபீல்டு வென்ஸ்டே குழுவை 1-0 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து, காலிறுதிச் சுற்றுக்குள் நுழைந்தது. நட்சத்திர ஆட்டக்காரர் செர்ஜியோ அகுவேரோ ஆட்டத்தின் 53வது நிமிடத்தில் அந்த கோலை அடித்தார்.

மற்றோர் ஆட்டத்தில் லெஸ்டர் சிட்டி 1-0 என பர்மிங்ஹம் சிட்டியை வீழ்த்தியது. டோட்டன்ஹம் ஹாட்ஸ்பர்-நார்விச் சிட்டி குழுக்கள் 1-1 எனச் சமனில் முடிந்தபோதும் பெனால்டி வாய்ப்புகளில் 5-3 என நார்விச் வெற்றிபெற்றது. போட்டிக்குப்பின் ரசிகர் ஒருவர் ஏதோ இழிவாகக் கூறிவிட்டார் என்பதற்காக ஸ்பர்ஸ் ஆட்டக்காரர் எரிக் டயர், பார்வையாளர் பகுதிக்குள் குதித்து வாக்குவாதத்தில் இறங்க, அவ்விடமே பரபரப்பானது.

இம்மாதம் 20-22 தேதிகளில் நடக்கவுள்ள காலிறுதிச் சுற்று ஆட்டங்களில் ஷெஃபீல்டு யுனைடெட் - ஆர்சனல், மேன்சிட்டி-நியூகாசல் யுனைடெட், லெஸ்டர் - செல்சி, மான்செஸ்டர் யுனைடெட் அல்லது டார்பி - நார்விச் சிட்டி குழுக்கள் மோதவிருக்கின்றன.