இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக ஜோஷி

இந்திய அணியின் தேர்வுக்குழுத் தலைவராக ஜோஷி

1 mins read
b5310ea9-98e0-48ee-9d27-647fab503504
இந்திய கிரிக்கெட் அணித் தேர்வுக்குழுவின் புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி. கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

மும்பை: இந்திய கிரிக்கெட் அணித் தேர்வுக்குழுவின் புதிய தலைவராக முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி, 49, அறிவிக்கப்பட்டு உள்ளார். இதுநாள் வரை தெற்கு மண்டலத்தைப் பிரதிநிதித்து வந்த எம்எஸ்கே பிரசாத்தின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ஜோஷி அவரது இடத்தை நிரப்புவார். அதே போல, மத்திய மண்டலத்தைச் சேர்ந்த ககன் கோடாவிற்குப் பதிலாக இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஹர்விந்தர் சிங் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளார். தேவங் காந்தி, சரண்தீப் சிங், ஜத்தின் பரஞ்பே ஆகியோர் குழுவின் மற்ற மூன்று உறுப்பினர்கள். தேர்வுக்குழுத் தலைவராவார் என எதிர்பார்க்கப்பட்ட அஜித் அகர்கர் புறக்கணிக்கப்பட்டார்.