புதுடெல்லி: டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்று முன்னேறிய இந்திய பெண்கள் அணிக்கு இந்திய ஆண்கள் அணித் தலைவர் விராத் கோஹ்லி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
"இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ள இந்திய பெண்கள் அணிக்கு வாழ்த்துகள். உங்களை நினைத்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இறுதிப்போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வாழ்த்துகள்' என்று கோஹ்லி டுவிட்டரில் பதிவிட்டார்.
"உலகக் கிண்ணப் போட்டியில் லீக் சுற்றில் அனைத்து ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதால் இந்திய மகளிர் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று மகுடம் சூடுவதற்கு வாழ்த்துகள்' என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்தார்.

