'ஜடேஜாவை அனுப்ப முடியாது'

'ஜடேஜாவை அனுப்ப முடியாது'

1 mins read
db467cd0-eac8-4a1f-bd13-d5bcbb7d208a
நாடுதான் முக்கியம், ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஜடேஜாவை அனுப்ப முடியாது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். படம்: ராய்ட்டர்ஸ் -

புதுடெல்லி: நாடுதான் முக்கியம், ரஞ்சி கிண்ண கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு ஜடேஜாவை அனுப்ப முடியாது என்று பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ரஞ்சி கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி நாளை மறுநாள் தொடங்குகிறது. இதில் சவுராஷ்டிரா - பெங்கால் அணிகள் மோதுகின்றன.

புஜாரா மற்றும் ஜடேஜா ஆகியோர் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடக்கூடியவர்கள். சகா பெங்கால் அணிக்காக விளையாடக்கூடியவர். நியூசிலாந்து தொடர் முடிந்துள்ளதால் சவுராஷ்டிரா அணிக்காக புஜாரா மற்றும் ஜடேஜா ஆகியோர் விளையாட விரும்பினார்கள்.

ஆனால், தென்னாப்பிரிக்க அணி இந்தியா வந்து மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடு கிறது.

இந்தத் தொடர் இம்மாதம் 12ஆம் தேதி தொடங்குகிறது. புஜாரா ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடாததால் அவர் சவுராஷ்டிரா அணிக்காக விளையாடலாம். இதில் எந்த பிரச்சினையும் இல்லை.

ஆனால் ஜடேஜா ஒருநாள் அணியில் இடம் பிடித்துள்ளதால் அவரை ரஞ்சி இறுதிப்போட்டிக்கு அனுப்ப முடியாது என்று பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார்.