கடந்த காலத்தைக் கண்முன் நிறுத்திய சச்சின் - சேவாக்

கடந்த காலத்தைக் கண்முன் நிறுத்திய சச்சின் - சேவாக்

1 mins read
3a53affc-646d-4a51-8a03-a064617feb86
படம்: ஊடகம் -

மும்பை: அனைத்துலக கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்று ஏழு ஆண்டுகளாகி விட்டாலும் தங்களின் பந்தடிப்புத் திறமை சற்றும் மங்கிவிடவில்லை என்பதைக் கண்முன் காட்டினர் இந்திய அணியின் முன்னாள் தொடக்க பந்தடிப்பாளர்களான சச்சின் டெண்டுல்கரும் வீரேந்தர் சேவாக்கும் (படம்). முன்னாள் வீரர்கள் பங்கேற்கும் 'சாலைப் பாதுகாப்பு உலகத் தொடர்' டி20 போட்டிகள் இந்தியாவில் நேற்று முன்தினம் தொடங்கின. ஐந்து அணிகள் பங்கேற்கும் இத்தொடரின் முதல் ஆட்டத்தில் சச்சின் தலைமையிலான இந்தியாவும் லாரா தலைமையிலான வெஸ்ட் இண்டீசும் மோதின. முதலில் பந்தடித்த வெஸ்ட் இண்டீஸ் எட்டு விக்கெட் இழப்பிற்கு 150 ஓட்டங்களை எடுத்தது. அடுத்து பந்தடித்த இந்திய அணியில் சச்சின் 36 ஓட்டங்களையும் சேவாக் இறுதி வரை களத்தில் நின்று

74 ஓட்டங்களையும் எடுக்க, அந்த அணி 10 பந்துகள் எஞ்சி இருந்த நிலையில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சேவாக் ஆட்ட நாயகனாகத் தேர்வு பெற்றார். படம்: தகவல் ஊடகம்