ரியால் மட்ரிட் தோல்வி; பார்சிலோனா முன்னிலை

ரியால் மட்ரிட் தோல்வி; பார்சிலோனா முன்னிலை

1 mins read

செவில்: ஸ்பெயினின் லா லீகா காற்பந்து லீக் போட்டியில் ரியால் பெட்டிசிடம் 2-1 எனும் கோல் கணக்கில் ரியால் மட்ரிட் நேற்று முன்தினம் தோற்றது.

இந்தத் தோல்வியின் மூலம் லீக் பட்டியலில் முதல் இடத்தில் இருந்த ரியால் மட்ரிட் இரண்டாவது இடத்துக்குச் சரிந்துள்ளது. பரம வைரியான பார்சிலோனா லீக்கின் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் ரியால் சோசியடாட் குழுவை 1-0 எனும் கோல் கணக்கில் அது வீழ்த்தியது.