எம்பாப்பே நிம்மதி

எம்பாப்பே நிம்மதி

1 mins read

பாரிஸ்: கொவிட்-19 கிருமி தம்மைத் தொற்றவில்லை என எனச் சோதனை முடிவுகள் உறுதிசெய்ததை அடுத்து நட்சத்திர பிரெஞ்சு காற்பந்து ஆட்டக்காரரான கிலியன் எம்பாப்பே நிம்மதியடைந்து உள்ளார். அவர் பிரதிநிதித்து வரும் பிஎஸ்ஜி குழுவும் ஜெர்மனியின் டோர்ட்மண்ட் குழுவும் இன்று அதிகாலை சாம்பியன்ஸ் லீக் ஆட்டத்தில் மோதவிருந்தன. இந்நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலம் குன்றியிருந்த எம்பாப்பே பயிற்சியிலும் ஈடுபடவில்லை. இதைத் தொடர்ந்து, அவர் கொரோனா கிருமித்தொற்றுப் பரிசோதனைக்கு அவர் உட்படுத்தப்பட்டார்.