தொடர்ந்து முன்னேறும் மான்செஸ்டர் யுனைடெட்

தொடர்ந்து முன்னேறும் மான்செஸ்டர் யுனைடெட்

2 mins read
654a713f-0609-4d24-a8df-70c8b5c6adcd
யுனைடெட்டின் முதல் கோலைப் போட்ட ஒடியோன் இகாலோ. படம்: இபிஏ -

வியன்னா: ஜனவரி மாதம் போர்ச்சுகீசிய வீரர் புருனோ ஃபெர்னாண்டஸை வாங்கிய பின் மான்செஸ்டர் யுனைடெட் குழு அனைத்துப் போட்டிகளிலும் தொடர்ச்சியாக 11 ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தத் தொடர் வெற்றியில் அவர்களின் ஆட்டத் திறனும் மெருகேறி வருவது கண்கூடாகத் தெரிகிறது.

நேற்று அதிகாலை யூரோப்பா லீக் கிண்ணப் போட்டியில் ஆஸ்திரியக் குழுவான லாஸ்க்கை எதிர்கொண்ட யுனைடெட் ஒன்றன் பின் ஒன்றாக ஐந்து கோல்கள் போட்டு காலிறுதிக்குத் தகுதி பெறும் முதல் சுற்று ஆட்டத்தில் 5-0 என முன்னிலை பெற்றுள்ளது. கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஆட்ட மைதானத்தில் நேற்று 500 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

ஆட்டத்தின் 28ஆம் நிமிடத்தில் யுனைடெட்டின் புருனோ ஃபெர்னாண்டஸ் தமது காலின் வெளிப்பகுதியால் உதைத்த பந்தை யுனைடெட் அணிக்கு தற்காலிகமாக வந்துள்ள தாக்குதல் வீரர் இகாலோ பந்தை இடது காலிலிருந்து வலது காலுக்கு இப்படியும் அப்படியுமாக தட்டி பின் அதை லாஸ்க் கோல் கம்பத்தின் மேல் பகுதியில் உரசியபடியே கோல் போட்டது அபாரம் என்று கூறப்படுகிறது.

இகாலோ இதைவிடச் சிறந்த முறையில் கோல்கள் போட்டிருப்பாரா என்பது சந்தேகம்தான் என்று பிபிசி தகவல் தெரிவிக்கிறது.

நேற்றைய ஆட்டத்திற்கு களமிறக்கிய அணியில் ஐந்து மாற்றங்களை யுனைடெட் நிர்வாகி சோல்சியார் செய்தபோதும் அந்த அணி ஆட்டம் முழுவதும் தன்னம்பிக்கையுடனும் தட்டுத் தடங்கல் இல்லாமலும் விளையாடியதாக காற்பந்து விமர்சகர்கள் கூறுகின்றனர்.

யுனைடெட்டின் யுவான் மாட்டா, டேனியல் ஜேம்ஸ், ஹேரி மெக்குவயர் ஆகியோரும் கோல் போடும் வாய்ப்புகளை தவறவிட்டனர் என்றும் அவர்களுடன் இகாலோவும் மேலும் ஒரு கோல் போடும் வாய்ப்பை இழந்தார் என்றும் கூறப்படுகிறது.

எனினும், யுனைடெட்டின் இரண்டாவது கோலுக்கு அடித்

தளம் அமைத்துக் கொடுத்ததும் இகாலோதான். ஆட்டத்தின் 58ஆம் நிமிடத்தில் அவர் கொடுத்த பந்தை டேனியல் ஜேம்ஸ் பலம் கொண்ட மட்டும் உதைத்து கோலாக்கினார்.

பின்னர், ஆட்டத்தின் 82ஆம் நிமிடத்திலும் கூடுதல் நேரமான 91ஆம், 93ஆம் நிமிடங்களில் மாட்டா, கிரீன்வுட், பிரேரா என மற்ற வீரர்களும் தங்கள் பங்கிற்கு கோல்கள் போட்டனர்.

மான்செஸ்டர் யுனைடெட்டின் அனைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடினர் என்றாலும் புதிய வரவான புருனோ ஃபெர்னாண்டஸே ஆட்டநாயகனாக முத்திரை பதித்தார் என்று பிபிசி தகவல் கூறுகிறது. மேலும், அவருடைய உந்துதலால் யுனைடெட்டின் மற்றொரு மத்திய திடல் வீரரான ஃபிரெட் என்பவரும் சிறப்பாக விளையாடியதாகக் கூறப்படுகிறது.

இந்த வெற்றி குறித்து கருத்துரைத்த சோல்சியார், "எங்கள் குழுவினர் கோல் போட்ட விதத்தில் தெரிந்த ஆட்டத்திறன் அளவிட முடியாதது. அவர்கள் விளையாடிய விதமும் காற்பந்தாட்டத்திற்கு சிறப்பு சேர்ப்பதாக இருந்தது.

"இந்த வீரர்களை ஒருமுகப்

படுத்தி விளையாட வைப்பதில் சிரமமிருந்ததில்லை, ஏனெனில் இவர்கள் அனைவருமே தங்களுக்கு என்ன வேண்டும், எப்படி விளையாட வேண்டும் என்பதை நன்கு அறிந்தவர்களாக இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சிறப்பாக உருவெடுப்பர்," என்று புகழாரம் சூட்டினார்.