ரசிகர்கள் இல்லாமல் ஐஎஸ்எல் காற்பந்து இறுதிப்போட்டி

1 mins read

புதுடெல்லி: இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டம் இன்று கோவாவில் நடைபெறுகிறது.

இந்த ஆட்டத்தில் சென்னையின் எப்.சி.-அட்லெடிக்கோ டி கோல்கத்தா அணிகள் மோதுகின்றன. கொரோனா கிருமித்தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தப் போட்டி நடைபெறும் விளையாட்டரங்கத்திற்குள் ரசிகர்களுக்கு அனுமதி இல்லை.

இதேபோல் ஐ லீக் காற்பந்துப் போட்டியின் எஞ்சிய 28 ஆட்டங்களும் ரசிகர்கள் இல்லாமல் நடைபெறக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து முடிவு எடுக்க நேற்று கூட்டம் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.