பர்மிங்ஹம்: ஆல் இங்கிலாந்து பொது விருது பூப்பந்துப் போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்ஹம் நகரில் நடந்து வருகிறது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தரவரிசையில் மூன்வறாது இடத்தில் இருக்கும் ஜப்பானின் அகானே யமாகுச்சியை எதிர்கொண்டார்.
28 நிமிடங்கள் மட்டுமே நடந்த இந்த ஆட்டத்தில் சாய்னா 11-21, 8-21 என்ற நேர் செட்டில் தோல்வி யைத் தழுவினார்.
இதனால் சாய்னாவின் ஒலிம்பிக் வாய்ப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

