கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு

கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைப்பு

2 mins read
6538e50b-da6c-493b-8f32-c8c8fa9e43ee
Virat Kohli (right) having a word with New Zealand fast bowlers Tim Southee (left) and Trent Boult during the second Test. PHOTO: AFP -

புது­டெல்லி: கொரோனா கிருமி நூற்­றுக்கு மேற்­பட்ட நாடு­க­ளுக்­குள் நுழைந்­து­விட்­டதை அடுத்து விளை­யாட்­டுப் போட்­டி­கள் ரத்து செய்­யப்­ப­டு­வ­தாக அல்­லது ஒத்­தி­வைக்­கப்­ப­டு­வ­தாக அறி­விப்­பு­கள் வெளி­யா­கிய வண்­ணம் உள்­ளன. அந்த வகை­யில், மூன்று ஒரு­நாள் போட்­டி­களில் விளை­யா­டு­வதற்­காக இந்­தியா சென்­றி­ருந்த தென்­னாப்­பி­ரிக்க அணி ஒரு போட்­டி­யில்­கூட பங்­கேற்­கா­மல் நாடு திரும்­பு­கிறது. இம்­மா­தம் 12ஆம் தேதி தர்­ம­சா­லா­வில் நடக்­க­வி­ருந்த முதல் போட்டி மழை­யால் கைவி­டப்­பட்­டது. இந்­நி­லை­யில், இன்று லக்­னோ­விலும் வரும் 18ஆம் தேதி கோல்­கத்­தா­வி­லும் நடை­பெ­ற­வி­ருந்த அடுத்த இரு போட்­டி­களும் ரத்து செய்­யப்­ப­டு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டு உள்­ளது. இந்­தி­யா­வில் கொரோனா கிருமி இது­வரை 80க்கு மேற்­பட்­டோ­ரைத் தொற்­றி­யுள்­ளதை அடுத்து தென்­னாப்­பி­ரிக்க வீரர்­கள் இந்­தி­யா­வில் தொடர்ந்து விளை­யா­டத் தயா­ராக இல்லை எனக் கூறப்­பட்­டது. இதன் காரணமாக, இரு நாட்டு கிரிக்­கெட் வாரி­யங்­களும் தங்­க­ளுக்­குள் ஆலோ­சித்த பின்­னர் மூன்று போட்­டி­கள் கொண்ட தொடரை பின்­னொரு நாளில் நடத்த ஒப்­புக்­கொண்­டன. முன்­ன­தாக, இம்­மா­தம் 29ஆம் தேதி இந்­தி­யா­வில் தொடங்­க இருந்த ஐபி­எல் டி20 தொட­ரும் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்­தி­வைக்­கப்­பட்­டது.

இதற்­கி­டையே, ஆஸ்­தி­ரே­லியா - நியூ­சி­லாந்து அணி­க­ளுக்கு இடை­யே­யான ஒரு­நாள் போட்­டித் தொட­ரும் ஒரு போட்­டி­யு­டன் தள்­ளி­வைக்­கப்­பட்­டது. சிட்னி அரங்­கில் நேற்று முன்­தி­னம் ரசி­கர்­கள் எவ­ரு­மின்றி இவ்­விரு அணி­களும் மோதிய முதல் போட்­டி­யில் ஆஸ்­தி­ரே­லிய அணி 71 ஓட்ட வித்­தி­யா­சத்­தில் வெற்றி பெற்­றது. இந்­நி­லை­யில், நேற்று நள்­ளி­ரவு முதல் வெளி­நா­டு­களில் இருந்து நியூ­சி­லாந்­துக்கு வரும் அனை­வரும் தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டு­வர் என நியூசி­லாந்து பிர­த­மர் ஜெசிண்டா ஆர்டன் அறி­வித்­துள்­ளார். இதை­ய­டுத்து, நியூ­சி­லாந்து அணி­யி­னர் ஆஸ்­தி­ரே­லி­யா­வி­ல் இ­ருந்து நேற்று மாலையே அவசர அவசரமாக சொந்த நாட்­டிற்­குக் கிளம்­பி­ச் சென்றனர்.