நியூசிலாந்து வீரருக்கு கொரோனா சோதனை

1 mins read

சிட்னி: ஆஸ்­தி­ரே­லிய அணிக்கு எதி­ரான முதல் ஒரு­நாள் போட்­டிக்­குப் பின்­னர் தமக்­குத் தொண்டை எரிச்­சல் இருப்­ப­தா­கக் கூறிய நியூசி­லாந்து கிரிக்­கெட் அணி­யின் வேகப் பந்­து­வீச்­சா­ளர் லாக்கி ஃபெர்கு­சன், அவ்­வணி தங்கி இருந்த ஹோட்­ட­லி­லேயே தனி­மைப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளார்.

அவரை கொரோனா கிருமி தொற்­றி­யி­ருக்­கி­றதா என்­பதை அறிய மருத்­து­வச் சோதனை நடத்­தப்­பட்­டுள்­ளது. சோதனை முடிவு தெரிந்த பிறகே, அவர் ஊர் திரும்ப முடி­யுமா என்பது தெரியவரும்.

முன்­ன­தாக, ஆஸ்­தி­ரே­லிய வேகப் பந்­து­வீச்­சா­ளர் கேன் ரிச்­சர்ட்­ச­னும் தொண்டை எரிச்­சல் இருப்­ப­தா­கக் கூற, அவ­ரி­டம் கொரோனா சோதனை மேற்­கொள்­ளப்­பட்­டது. அதில், அவரை கிருமி தொற்­ற­வில்லை என உறு­தி­யா­னது.