ஐஎஸ்எல்: மூன்றாவது முறை கிண்ணம் வென்ற கோல்கத்தா

ஐஎஸ்எல்: மூன்றாவது முறை கிண்ணம் வென்ற கோல்கத்தா

1 mins read
35cf8f88-fc51-4d8b-8b62-0755677f6fa7
தோல்வியைத் தவிர்க்க வெறித்தனமாக மோதிய சென்னையின் எஃப்சி வீரர் எட்வின் ஹென்றி (இடது). படம்: ஏஎஃப்பி -

கோவா: ஐஎஸ்­எல் காற்பந்து தொட­ரின் இறுதி ஆட்­டத்­தில் அட்­லெ­டிகோ டி கோல்­கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்­கில் சென்­னை­யின் எஃப்சியை வீழ்த்தி 3-வது முறை­யாக சாம்­பி­யன் பட்­டம் வென்­றது.

6வது இந்தியன் சூப்பர் லீக் காற்பந்து (ஐஎஸ்எல்) தொடரின் இறுதி ஆட்டம் கோவா ஃபடோர்­டா­வில் உள்ள நேரு விளை­யாட்­ட­ரங்­கில் சனிக்­கி­ழமை நடை­பெற்றது.

முதல் பாதி­யில் தொடர்ந்து போரா­டியபோதி­லும் சென்னை அணி­யால் கோல் அடிக்க முடி­யா­மல்போனது. இத­னால் முதல் பாதி­யில் கோல்­கத்தா அணி 1-0 என முன்­னிலை வகித்­தது.

நிர்­ண­யிக்­கப்­பட்ட 90 நிமி­டங்­க­ளின் முடி­வில் கோல்கத்தா அணி 2-1 என்ற கோல் கணக்­கில் கோல்­கத்தா முன்­னி­லை­யில் இருந்­தது. இதை­ய­டுத்து காயங்­க­ளுக்கு இழப்­பீ­டாக வழங்­கப்­பட்ட நேரத்­தில் ஜேவி­யர் ஹெர்­னாண்­டஸ் மீண்­டும் கோல் அடிக்க கோல்­கத்தா அணி 3-1 என்ற கோல் கணக்­கில் வெற்றி பெற்று சாம்­பி­யன் பட்­டம் வென்­றது.

ஐஎஸ்­எல் கால்­பந்து தொட­ரில் கோல்­கத்தா அணி சாம்­பி­யன் பட்­டம் வெல்­வது இது 3வது முறை­யா­கும். இதற்கு முன்­னர் அந்த அணி கடந்த 2014 மற்­றும் 2016ஆம் ஆண்­டு­களில் அந்த அணி கிண்­ணத்தை வென்­றி­ருந்­தது.

கொரோனா கிருமி தாக்கம் எதிரொலியால் ரசிகர்களின்றி ஐஎஸ்எல் காற்பந்து இறுதிப்போட்டி நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.