இலக்கியா சாதிக்க இருகரங்கள் போதாது

இலக்கியா சாதிக்க இருகரங்கள் போதாது

1 mins read
189bb0f9-f8e6-419c-893d-9ae15c82a988
மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் சாதித்து வரும் தமிழக இளம் வீராங்கனை இலக்கியா. படம்: ஊடகம் -

சென்னை: மோட்டார் சைக்கிள் பந்தயங்களில் சாதித்து வரும் தமிழக இளம் வீராங்கனை இலக்கியா (படம்), தொடர்ந்து சாதனைகள் புரிய தமக்கு தமிழக அரசும் பெரிய நிறுவனங்களும் உதவவேண்டும் என கோரிக்கை வைத்து உள்ளார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இலக்கியா (23), இளம்வயதிலேயே மோட்டார் சைக்கிள் ஓட்ட ஆர்வம் கொண்டவர்.

தொடர்முயற்சிகளின் பலனாக 2017ஆம் ஆண்டு நடந்த 5 சுற்றுகள் கொண்ட தேசிய ஹோண்டா பைக் பந்தயத்தில் 3வது சுற்றில் பங்கேற்றார். ஆனாலும் 3வது இடமே கிடைத்தது. தொடர்ந்து டிவிஎஸ் பந்தயத்தில் 2018, 2019ம் ஆண்டுகளில் சாம்பி யன் பட்டியலில் இடம்பிடித் தார். தற்போது தேசிய அளவில் 15 போட்டிகளில் பங்கேற்று பல்வேறு பரிசுகளை வென்றார். அனைத்து லக போட்டிகளில் பங்கேற்க ஆர்வம் காட்டும் அவருக்கு அவருடைய பொருளாதாரம் உரிய இடம்தரவில்லை. தனியார் நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் வேலை செய்யும் இலக்கியா, அஞ்சல்வழி பட்டப்படிப்பை தொடர்கிறார்.