புதுடெல்லி: ஐபிஎல் போட்டிகள் தள்ளிவைப்பு, தென்னாப்பிரிக்காவுடனான போட்டிகள் ரத்து போன்ற காரணங்களால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு மாதகாலம் ஓய்வு கிடைத்துள்ளது.
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராத் கோஹ்லி தனது டுவிட்டர் பதிவில், "அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை களையும் பின்பற்றி கொரோனா கிருமித்தொற்றை எதிர்த்துப் போராட அனைத்து மக்களும் மனதளவில் வலுவாக இருக்க வேண்டும். பாதுகாப்புடனும் விழிப்புணர்வு டனும் இருங்கள்.
வந்த பிறகு குணப்படுத்து வதைவிட வரும்முன் காப்பதே சிறந்தது என்பதை அனை வரும் நினைவில்கொள்ளுங் கள். தயவுசெய்து எல்லோரும் கவனமாக இருங்கள்," என்று விராத் கோஹ்லி கேட்டுக் கொண்டுள்ளார்.

