காற்­பந்­துப் போட்­டி­க­ளைத் திட்­ட­மிட்­ட­படி நடத்தி முடிப்­ப­தில் சிக்­கல்

காற்­பந்­துப் போட்­டி­க­ளைத் திட்­ட­மிட்­ட­படி நடத்தி முடிப்­ப­தில் சிக்­கல்

2 mins read
5480593b-ccdb-4caa-8502-0c6900d881e5
கொரோனா கிரு­மித்­தொற்று ஐரோப்­பாவை முகா­மிட்­டுள்­ள­தால் இந்­தப் பரு­வத்­திற்­கான சாம்­பி­யன்ஸ் லீக், யூரோப்பா லீக் காற்­பந்­துப் போட்­டி­க­ளைத் திட்­ட­மிட்­ட­படி உரிய காலத்­தில் நடத்தி முடிப்­ப­தில் சிக்­கல் எழுந்­துள்­ளது. படம்: ராய்ட்டர்ஸ -

பாரிஸ்: கொரோனா கிரு­மித்­தொற்று ஐரோப்­பாவை முகா­மிட்­டுள்­ள­தால் இந்­தப் பரு­வத்­திற்­கான சாம்­பி­யன்ஸ் லீக், யூரோப்பா லீக் காற்­பந்­துப் போட்­டி­க­ளைத் திட்­ட­மிட்­ட­படி உரிய காலத்­தில் நடத்தி முடிப்­ப­தில் சிக்­கல் எழுந்­துள்­ளது.

ஐரோப்­பா­வின் அவ்­விரு முக்­கிய லீக் போட்­டி­கள் இன்­னும் காலி­று­திச் சுற்­றையே எட்­டாத நிலை­யில் அவற்­றின் அரை­யி­றுதி, இறு­திச் சுற்று ஆட்­டங்­களை நான்கு நாட்­க­ளுக்­குள் நடத்தி முடிப்­பது குறித்து பரி­சீ­லிக்­கப்­பட்டு வரு­கிறது.

ஐரோப்­பிய காற்­பந்­துச் சங்­கங்­கள் ஒன்­றி­யத்­தின் (யூஃபா) அவ­ச­ர­கால கூட்­டம் காணொ­ளிக் கலந்­து­ரை­யா­டல் மூல­மாக இன்று நடை­பெ­ற­வுள்­ளது. அப்­போது, சாம்­பி­யன்ஸ் லீக்­கின் அரை­யி­றுதி, இறு­திச் சுற்று ஆட்­டங்­களை துருக்­கி­யின் இஸ்­தான்­புல் விளை­யாட்­ட­ரங்­கில் நான்கு நாட்­க­ளுக்­குள் நடத்தி முடிப்­பது குறித்து ஆலோ­சிக்­கப்­ப­ட­லாம் என்று 'தி டெலி­கி­ராஃப்' ஊட­கம் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

இந்த யோசனை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்­டால், யூரோப்பா லீக்­கிற்­கும் இதே முறை பின்­பற்­றப்­படும். அதன்­படி, போலந்­தின் கடான்ஸ்க் நக­ரில் யூரோப்பா லீக் அரை­யி­றுதி, இறு­திச் சுற்று ஆட்­டங்­கள் நடை­பெ­றக்­கூ­டும்.

யூஃபா அவ­ச­ர­கா­லக் கூட்­டத்­தில் இன்­னொரு யோச­னை­யும் முன்­வைக்­கப்­ப­ட­லாம் எனச் சொல்­லப்­ப­டு­கிறது.

காலி­றுதி, அரை­யி­று­திச் சுற்­று­கள் தலா இரு ஆட்­டங்­க­ளாக நடத்­தப்­பட்டு வரு­வது வழக்­கம். இந்த நிலை­யில், இம்­முறை ஒரு போட்டி மட்­டும் கொண்ட வகை­யில் காலி­றுதி, அரை­யி­று­திச் சுற்­று­களை நடத்­து­வது குறித்­தும் அவற்றை ஒரு வார காலத்­திற்­குள் நடத்தி முடிப்­பது குறித்­தும் இன்­றைய கூட்­டத்­தில் ஆலோ­சிக்­கப்­ப­ட­லாம் எனத் தெரி­கிறது.

தற்­கா­லி­கத் தடை முடிந்து வழக்­க­நிலை திரும்­பி­ய­பின், காலி­று­திக்கு முந்­திய சுற்று ஆட்­டங்­களை நடத்த யூஃபா திட்­ட­மி­ட­லாம்.

அத்­து­டன், இவ்­வாண்டு இடம் பெற­வுள்ள யூரோ காற்­பந்­துப் போட்­டி­களை ஓராண்­டுக்­குப் பின் நடத்­து­வது குறித்­தும் ஆலோ­சிக்­கப்­படும் எனத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது.

முன்­னணி இத்­தா­லிய காற்­பந்­துக் குழு­வான யுவென்­டஸ் ஆட்­டக்­கா­ரர் டேனி­யல் ருகா­னியை கொரோனா கிருமி தொற்­றி­யுள்­ள­தால் ஒட்­டு­மொத்த குழு­வி­ன­ரும் தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

அது­போல, பதின்­மூன்று முறை சாம்­பி­யன்ஸ் லீக் பட்­டம் வென்று உள்ள ஸ்பெயி­னின் ரியால் மட்­ரிட் குழு­வி­ன­ரும் தனி­மைப்­ப­டுத்தி வைக்­கப்­பட்­டுள்­ள­னர். அந்த விளை­யாட்­டுக் குழு­மத்­தின் கூடைப் பந்து ஆட்­டக்­கா­ரர் ஒரு­வ­ரைக் கிருமி தொற்­றி­யதை அடுத்து இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது. ஆர்­சனல் நிர்­வாகி அர்­டேட்டா, செல்சி வீரர் ஹட்­சன் ஒடோய் ஆகி­யோ­ரை­யும் கிருமி தொற்றியுள்ளது.