யூரோ 2020 காற்பந்துப் போட்டியை ஒத்திவைக்க இத்தாலி கோரிக்கை

யூரோ 2020 காற்பந்துப் போட்டியை ஒத்திவைக்க இத்தாலி கோரிக்கை

2 mins read
9d75be67-b234-4813-bc0b-41b7d7626a78
யூரோ 2020 காற்­பந்­துப் போட்­டி­களை அடுத்த ஆண்­டிற்கு ஒத்­தி­வைக்­கு­மாறு இத்­தா­லிய காற்­பந்­துச் சங்­கம் ஐரோப்­பிய காற்­பந்து சங்­கத்­துக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது. படம்: இபிஏ-இஎஃப்இ -

ரோம்: இத்­தா­லி­யில் கெரோனா கிரு­மித்­தொற்று வேக­மா­கப் பர­வி­வ­ரு­வ­தால் அந்­நாடு நெருக்­க­டி­யைச் சந்­தித்து வரு­சி­றது.

இதைத் தொடர்ந்து, கிரு­மித்­தொற்று கார­ண­மாக தற்­பொ­ழுது நிறுத்­தி­வைக்­கப்­பட்­டுள்ள இத்தாலிய லீக் காற்­பந்­துப் போட்­டி­களை முத­லில் முடி­வுக்கு கொண்­டு­வர வேண்­டும். இதற்­காக இவ்­வாண்டு ஜூன் மாதம் நடை­பெ­று­வ­தாக உள்ள யூரோ 2020 காற்­பந்­துப் போட்­டி­களை அடுத்த ஆண்­டிற்கு ஒத்­தி­வைக்­கு­மாறு இத்­தா­லிய காற்­பந்­துச் சங்­கம் ஐரோப்­பிய காற்­பந்து சங்­கத்­துக்கு வேண்­டு­கோள் விடுத்­துள்­ளது.

இதன் தொடர்­பில் ஐரோப்­பிய காற்­பந்­துச் சங்­கத்­தின் அவ­ச­ர­நிலை கூட்­டத்­தில் இந்த வேண்­டு­கோள் முன்­வைக்­கப்­படும் என்று இத்­தா­லிய காற்­பந்­துச் சங்­கத்­தின் தலை­வர் கேப்­ரி­யெல் கிரா­வினா கூறி உள்­ளார்.

'ஸ்போர்ட்­மீ­டி­யா­செட்' என்ற தொலைக்­காட்சி நிறு­வ­னத்­துக்கு அளித்த பேட்டி ஒன்­றில் பேசிய அவர், "யூரோ வெற்­றி­யா­ளர் போட்­டி­களை ஒத்­தி­வைக்­கு­மாறு நாங்­கள் கேட்­டுக்­கொள்­வோம். இத்­தா­லிய காற்­பந்­துக் குழுக்­கள் செய்­துள்ள முத­லீ­டு­கள், தியா­கங்­கள் ஆகி­ய­வற்­றைக் கருத்­திற்­கொண்டு முத­லில் நாம் லீக் போட்­டி­களை முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரு­வதே நியா­ய­மா­ன­தா­க­வும் சரி­யா­ன­தா­க­வும் இருக்­கும்," என்று விளக்­கி­னார்.

இந்­நி­லை­யில், இது தொடர்­பாக ஐரோப்­பிய காற்­பந்­துச் சங்­கம் அதன் 55 உறுப்­பி­னர் சங்க பிர­தி­நி­தி­க­ளை­யும் நேற்று காணொளி மாநாடு கூட்­டத்­திற்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தது இங்கு நினைவு கூரத்­தக்­கது.

இதற்­கி­டையே, இத்­தா­லி­யில் நில­வும் கொரோனா கிரு­மித்­தொற்று ெநருக்­க­டி­யால் யூரோ 2020 காற்­பந்­துப் போட்­டி­களை அடுத்த ஆண்டு, அதா­வது 2021ஆம் ஆண்டு, வைத்­துக்­கொள்­ள­லாம் என்று இத்­தா­லிய தேசிய காற்­பந்­துக் குழு­வின் பயிற்­று­விப்­பா­ளர் ராபர்ட்டோ மன்­சினி தெரி­வித்­துள்­ளார்.

"இவ்­வாண்டு கோடை காலத்­தில் நடை­பெ­ற­வுள்ள ஐரோப்­பிய காற்­பந்­துப் போட்­டி­களில் வென்று விருதை இத்­தாலி தட்­டிச் செல்­வது உறுதி.

"இதையே அடுத்த ஆண்­டில் நாம் செய்­ய­லாம்," என்று ராய் ஸ்போர்ட் என்ற இத்­தா­லிய தொலைக்­காட்சி நிறு­வ­னத்­துக்கு அளித்த பேட்­டி­யில் கூறி­யுள்­ளார்.

தொடர்ந்து பேசிய அவர், "ஐரோப்­பிய காற்­பந்­துச் சங்­கம் என்ன முடிவு எடுக்­கிறது என்று பார்ப்­போம். எந்த முடி­வுக்­கும் ஏற்­ற­வாறு என்­னால் சரி­செய்து ெகாள்ள முடி­யும். தற்­போ­தைய நிலை­யில் மனித உயிர்­க­ளைக் காப்­பதே முக்­கி­யம்," என்று அவர் தெரி­வித்­தார்.