பிரேசில் காற்பந்துக் குழு நிர்வாகியைத் தொற்றிய கிருமி

ரியோ டி ஜெனிரோ: முன்­னணி பிரே­சில் காபற்­பந்­துக் குழுக்­களில் ஒன்­றான ஃபிளமெங்கோ நிர்­வாகி ஜோர்ஜ் ஜேசுஸ் (படம்) கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளதை அடுத்து தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்.

“எனக்­குக் கிரு­மித்­தொற்று உறு­தி­செய்­யப்­பட்­டி­ருப்­பது உண்­மை­தான். ஆனா­லும், ஒரு மாதம், ஓராண்டு, ஈராண்டு, மூன்­றாண்­டு­க­ளுக்கு முன்­பி­ருந்­த­தைப் போலவே இப்­போ­தும் உணர்­கிறேன். ஓரிரு வாரங்­க­ளுக்­குத் தனித்­தி­ருப்­பேன். இறை­வன் ஆசி­ இருந்­தால் இயல்­பு­நி­லைக்­குத் திரும்­பு­வேன்,” என்று 65 வய­தான ஜேசுஸ் கூறி­யி­ருக்­கி­றார்.

போர்ச்­சு­க­லைச் சேர்ந்த இவ­ரது பயிற்­சி­யின்­கீழ் ஃபிளமெங்கோ குழு கடந்த பரு­வத்­தில் பிரே­சில் லீக் பட்­டத்­தை­யும் விடு­த­லை­யாளர்­கள் கிண்­ணத்­தை­யும் கைப்­பற்­றி­யது.

இத­னி­டையே, முதல் சோதனை முடி­வு­கள் தெளி­வில்­லா­மல் இருப்­ப­தால் ஜேசு­ஸுக்கு இரண்­டா­வது சோதனை நடத்­த­வி­ருப்­ப­தாக ஃபிளமெங்கோ குழு நிர்­வா­கம் தெரி­வித்­துள்­ளது.

அத்­து­டன், முதல்­நிலை மற்­றும் இளை­யர் குழுக்­க­ளுக்­கான பயிற்­சி­யை­யும் ஒரு வார காலம் ஃபிளமெங்கோ ரத்து செய்­து இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!