திட்டமிட்டபடி டி20 உலகக் கிண்ணப் போட்டி: ஆஸ்திரேலியா நம்பிக்கை

திட்டமிட்டபடி டி20 உலகக் கிண்ணப் போட்டி: ஆஸ்திரேலியா நம்பிக்கை

1 mins read

மெல்­பர்ன்: கொரோனா கிருமி உல­கெங்­கும் பர­வி­யுள்­ள­போ­தும் திட்­ட­மிட்­ட­படி இவ்­வாண்டு அக்­டோ­பர், நவம்­பர் மாதங்­களில் டி20 உல­கக் கிண்ண கிரிக்­கெட் போட்­டி­களை நடத்த முடி­யும் என ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் சங்­கம் நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்றை 'பேர­ளவு நோய்ப் பர­வ­லாக' உல­கச் சுகா­தார நிறு­வ­னம் அறி­வித்­தி­ருக்­கிறது. இதைத் தொடர்ந்து, கிரிக்­கெட், காற்­பந்து உள்­ளிட்ட அனைத்து விளை­யாட்­டுப் போட்டி­களை­யும் பல்­வேறு நாடு­களும் ரத்து செய்து அல்­லது ஒத்­தி­வைத்து வரு­கின்­றன.

இந்­நி­லை­யில், எந்த ஒரு பெரிய மாற்­ற­மும் இல்­லா­மல் இவ்­வாண்டு டி20 போட்­டி­களை நடத்­தத் திட்­ட­மிட்டு வரு­வதை ஆஸ்­தி­ரே­லிய கிரிக்­கெட் சங்­கத்­தின் தலைமை நிர்­வாகி கெவின் ராப்­ரட்ஸ் உறுதிப்­ப­டுத்­தி­யுள்­ளார்.

"இன்­னும் ஒரு சில வாரங்­களில் அல்­லது மாதங்­களில் எல்லா வகை விளை­யாட்­டுப் போட்­டி­களும் மீண்­டும் தொடங்­கும் என்று நாங்­கள் நம்­பு­கி­றோம். கொரோனா பிரச்­சினை எப்­போது முடி­வுக்கு வரும் என நம்­மில் எவ­ரா­லும் கூற முடி­யாது. ஆனா­லும், அக்­டோ­பர் மாதத்­திற்­குள் வழக்­க­நிலை திரும்பி, டி20 உல­கக் கிண்­ணத் தொடர் இடம்­பெ­றும் என்­றும் நம்­பு­கி­றோம்," என்­றார் திரு ராபர்ட்ஸ்.

மொத்­தம் 12 அணி­கள் பங்­கு­பெ­றும் டி20 உல­கக் கிண்­ணப் போட்­டி­க­ளுக்­கான தகு­திச் சுற்று ஆட்­டங்­கள் அக்­டோ­பர் 18-23 தேதி­க­ளுக்­குள் நடை­பெ­றும்.

அக்டோபர் 24ஆம் தேதி பிர­தான சுற்று ஆட்­டங்­கள் தொடங்­கும்.

அன்­றைய நாளில் சிட்னி விளை­யாட்­ட­ரங்­கில் நடக்­கும் ஆட்­டத்­தில் ஆஸ்­தி­ரே­லியா-பாகிஸ்­தான் அணி­களும் பெர்த் விளை­யாட்­டு அரங்­கில் நடக்­கும் ஆட்­டத்­தில் இந்­தியா-தென்­னாப்­பி­ரிக்கா அணி­களும் மோதும்.