பிசிசிஐ தலைமை அலுவலகம் மூடல்

பிசிசிஐ தலைமை அலுவலகம் மூடல்

1 mins read

மும்பை: கொரோனா கிருமித் தொற்று எதிரொலியாக இந்திய கிரிக்கெட் கட்டுப் பாட்டு வாரியம் (பிசிசி) மும்பையில் உள்ள தனது தலைமை அலுவலகத்தைத் தற்காலிகமாக நேற்று முதல் மூடிவிட்டது. ஊழியர்கள் அனைவரும் வீட்டிலிருந்து பணியாற்றும்படி பிசிசிஐ உத்தரவிட்டுள்ளது. கிரிக்கெட் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் நிறுத்துவதாக பிசிசிஐ ஏற்கெனவே அறிவித்துவிட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐபில் டி20 தொடர் அடுத்த மாதம் 15ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.