அலெக்ஸ்: தவறான செய்தி பரப்புவது மோசமான நடத்தை

அலெக்ஸ்: தவறான செய்தி பரப்புவது மோசமான நடத்தை

2 mins read
3af24532-70d3-4539-90a4-a15cfb8f7b4c
என்­னைப் பற்றி தவ­றான செய்தி பரப்­பு­வதை நிறுத்­துங்­கள். இது மோச­மான நடத்தை என்று கூறியுள்ளார் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் அலெக்ஸ் ஹாலெஸ். படம்: ஊடகம் -

பாகிஸ்­தான் சூப்­பர் லீக் 20 ஓவர் கிரிக்­கெட் போட்டி லீக் சுற்­றோடு தள்­ளி­வைக்­கப்­பட்டு விட்­டது. அதற்கு முன்­பா­கவே கொரோனா அச்­சத்­தால் பெரும்­பா­லான வெளி­நாட்­டுக் கிரிக்­கெட் வீரர்­கள் பாகிஸ்­தான் சூப்­பர் லீக்­குக்கில் விளையாடுவதைத் தவிர்த்து சொந்த நாடுகளுக்குத் திரும்பினர். அவ்வகையில் தாய­கம் திரும்­பி­ய­வர்­களில் இங்­கி­லாந்தைச் சேர்ந்த அலெக்ஸ் ஹாலெஸ் (படம்), ஜாசன் ராய், டைமல் மில்ஸ், லியாம் லிவிங்ஸ்­டன், ஜேம்ஸ் வின்ஸ் உள்­ளிட்­டோ­ரும் அடங்­குவர்.

இந்த நிலை­யில் பாகிஸ்­தான் சூப்­பர் லீக்­கில் விளை­யா­டிய வெளி­நாட்­டுக் கிரிக்­கெட் வீரர்­களில் ஒரு­வ­ருக்கு மட்­டும் கொரோனா அறி­குறி தென்­பட்­டது.

அவ­ரது பெயர் அலெக்ஸ் ஹாலெஸ் என்று பாகிஸ்­தான் முன்­னாள் அணித்தலைவரும், வர்­ண­னை­யா­ள­ரு­மான ரமிஸ் ராஜா நேற்று முன்தினம் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

பாகிஸ்­தான் கிரிக்­கெட் வாரி­யம் அந்த வீர­ரின் பெயரை வெளி­யிட மறுத்த நிலை­யில், ரமிஸ் ராஜா ரக­சி­யத்தை கசிய விட்டு விட்­டார்.

இதற்­குப் பதில் அளித்து 31 வய­தான அலெக்ஸ் ஹாலெஸ் கூறு­கை­யில் 'கடந்த சனிக்­கி­ழமை அதி­காலை தாய­கம் திரும்­பி­ய­போது உடல் ஆரோக்­கி­யத்­து­டன் நன்­றாக இருப்­ப­தாக உணர்ந்­தேன். கிருமி பாதிப்­புக்­கு­ரிய அறி­குறி எது­வும் இல்லை.

"மறு­நாள் காய்ச்­சல் மற்­றும் தொடர்ச்­சி­யான இரு­மல் இருந்­த­தால் அர­சாங்­கத்­தின் அறி­வு­றுத்­த­லின்­படி மற்­ற­வர்­க­ளு­டன் பழ­கு­வ­தைத் தவிர்த்து என்­னை­நானே தனி­மைப்­ப­டுத்­திக் கொண்­டேன்.

"இப்­போ­தைக்கு எனக்கு கொரோனா கிருமி தொற்றி இருக்­கி­றதா என்­பது குறித்­துப் பரி­சோ­தித்­துக்கொள்ள வாய்ப்­பில்லை. எனவே, என்­னைப் பற்றி தவ­றான செய்தி பரப்­பு­வதை நிறுத்­துங்­கள். இது மோச­மான நடத்தை" என்­றார்.