தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

தேசிய பள்ளி விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைப்பு

1 mins read
ea71a755-f7e9-4265-86c6-9d105db87462
கோப்புப்படம்: எஸ்டி -

ஜூன் பள்ளி விடு­முறை வரை பள்ளி மாண­வர்­க­ளுக்கு இடை­யி­லான தேசிய விளை­யாட்­டுப் போட்­டி­கள் ஒத்­தி­வைக்­கப்­ப­டு­வ­தாக கல்வி அமைச்சு அறி­வித்­துள்­ளது.

அடுத்த வாரம் பள்­ளி­கள் மீண்­டும் திறக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில் இரு வார காலத்­திற்கு இணைப் பாட நட­வ­டிக்­கை­களும் ரத்து செய்­யப்­ப­டு­வ­தாக அமைச்சு நேற்று தெரி­வித்­தது.

இவ்­வாண்­டுக்­கான தேசிய பள்ளி விளை­யாட்­டுப் போட்­டி­களில் கிட்­டத்­தட்ட 60,000 மாணவ விளை­யாட்­டா­ளர்­கள், 29 விளை­யாட்­டுப் போட்­டி­களில் போட்­டி­யி­டு­வர் என மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது. இந்­தப் போட்­டி­கள் ஜன­வரி தொடங்கி ஆகஸ்ட் மாதம் வரை விளை­யா­டப்­படும்.

டென்­னிஸ், பூப்­பந்து, தரைப்­பந்து, காற்­பந்து போன்ற விளை­யாட்­டுப் போட்­டி­கள் பாதிக் கட்­டத்­தைத் தாண்­டி­யுள்ள நிலை­யில் அவை நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

முன்­ன­தாக, கொரோனா கிருமி சிங்­கப்­பூ­ரி­லும் புகுந்­ததை அடுத்து கடந்த மாதம் 7ஆம் தேதி நோய்ப்­ப­ர­வ­லுக்­கான 'டோர்ஸ்­கான்' விழிப்­­நிலை ஆரஞ்சு நிறத்­திற்கு உயர்த்­தப்­பட்­டது. அதைத் தொடர்ந்து, தேசிய பள்ளி விளை­யாட்­டுப் போட்டி­களை மார்ச் மாத பள்ளி விடு­முறை வரை ஒத்­தி­வைப்­பது என கல்வி அமைச்சு தீர்­மா­னித்­து இ­ருந்­தது.