பெர்லின்: பேரளவு நோய்ப் பரவலாக உருவெடுத்துள்ள கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போருக்குக் கைகொடுக்கும் விதமாக ஜெர்மானிய தேசிய காற்பந்து அணி வீரர்கள் 2.5 மில்லியன் யூரோ (S$3.94 மி.) நன்கொடை வழங்கவுள்ளனர். "இதுபோன்றதொரு நேரத்தில்தான் நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ளவேண்டும். தேசிய அணி வீரர்களான நாங்களும் அதுகுறித்தே சிந்தித்து வருகிறோம். நல்லதொரு செயலுக்காக நன்கொடை வழங்குகிறோம்," என்று ஜெர்மானிய அணித்தலைவர் மேனுவல் நூயர் தெரிவித்துள்ளார். அத்துடன், தொண்டூழியத்தில் ஈடுபடும்படி தங்களின் ரசிகர்களையும் ஜெர்மானிய காற்பந்து வீரர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
காற்பந்து வீரர்கள் $3.9 மி. நன்கொடை
1 mins read
கோப்புப்படம்: ஏஎப்பி -

