ஜப்பானைச் சென்றடைந்த ஒலிம்பிக் சுடர்

ஜப்பானைச் சென்றடைந்த ஒலிம்பிக் சுடர்

2 mins read
fd27426a-8b65-4d4d-9f3c-ecbed9f4aa74
மூன்று முறை ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஜப்பான் மல்யுத்த வீராங்கனை சவோரி யோஷிடாவும் ஜூடோ வெற்றியாளர் டடஹிரோ நொமுரோவும் கிரீஸில் இருந்து விமானம் மூலம் ஒலிம்பிக் சுடரைக் கொண்டு வந்தபின், 'தோக்கியோ 2020 ஒலிம்பிக்' கொப்பரையை ஏற்றி வைக்கின்றனர். படம்: ஏஎஃப்பி -

தோக்­கியோ: கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஜப்­பான் தலை­ந­கர் தோக்­கி­யோ­வில் ஒலிம்­பிக் போட்­டி­கள் திட்­ட­மிட்­ட­படி நடை­பெ­றுமா என ஐயம் நில­வு­கிறது. இந்­நி­லை­யில், ஒலிம்­பிக் சுடரை ஏற்­றிச் சென்ற விமா­னம் ஜப்­பான் ஆகா­யத் தற்­காப்­புப் படை­யின் மட்­சு­ஷிமா தளத்­தில் நேற்று தரை இ­றங்­கி­யது என கியோடோ செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­துள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்றை 'பேர­ளவு நோய்ப் பர­வ­லாக' உலக சுகா­தார நிறு­வ­னம் அறி­வித்­தி­ருக்­கிறது. இதை­ய­டுத்து, அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப்­ உள்ளிட்ட பலரும் ஒலிம்­பிக் போட்­டி­களை ஓராண்­டுக்­குத் தள்­ளி­வைக்­க­லாம் என ஆலோ­சனை தெரி­வித்­து உள்ளனர்.

ஆனால், திட்­ட­மிட்­ட­ப­டி­யும் அதே வேளை­யில் பாது­காப்­பா­க­வும் ஒலிம்­பிக் போட்­டி­களை நடத்­து­வ­தில் ஜப்­பான் உறு­தி­யாக இருக்­கிறது.

இந்த நிலை­யில், பெரும்­பா­லும் காலி­யாக இருந்த நிலை­யில் ஒலிம்­பிக் சுடரை மட்­டும் ஏற்றி வந்த விமா­னம் ஜப்­பா­னில் நேற்று தரை­இறங்­கி­யது. முன்­ன­தாக, ஒலிம்­பிக் சுட­ரைக் கொண்டு வரு­வ­தற்­காக ஒலிம்­பிக் அமைச்­சர் செய்க்கோ ஹஷி­மோட்டோ, ஒலிம்­பிக் குழுத் தலை­வர் யோஷிரோ மோரி உள்­ளிட்ட பேரா­ளர்­களை அனுப்­ப ஜப்பான் திட்டமிட்டிருந்தது.

சுனா­மி­யா­லும் நில­ந­டுக்­கத்­தா­லும் பாதிக்­கப்­பட்ட டோஹோக்கு பகு­திக்கு ஒலிம்­பிக் சுடர் எடுத்­துச் செல்­லப்­படும் எனத் தெரி­விக்­கப்­பட்­டது. இதை 'மீட்­புச் சுடர்' பய­ணம் என ஏற்­பாட்­டா­ளர்­கள் குறிப்­பிட்­ட­னர். அதன்­பின், வரும் 26ஆம் தேதி ஃபுக்கு­ஷி­மா­வில் இருந்து ஒலிம்­பிக் சுட­ரின் அதி­கா­ர­பூர்வ 121 நாள் பய­ணம் தொடங்­கும்.

மவுன்ட் ஃபுஜி, ஹிரோ­ஷிமா அமைதி நினை­வுப் பூங்கா, கும­மோட்டோ கோட்டை உள்­ளிட்ட ஜப்­பா­னின் மிகப் புகழ்­பெற்ற இடங்­கள் வழி­யாக ஒலிம்­பிக் சுடர் ஏந்­திச் செல்­லப்­படும்.

ஒலிம்­பிக் சுடர் ஏந்­திச் செல்­லப்­படும் வழி­களில் மக்­கள் கூட­வேண்­டாம் என்று போட்டி ஏற்­பாட்­டா­ளர்­கள் வலி­யு­றுத்­தி­யுள்­ள­னர். வழி­யில் நடை­பெ­ற­வி­ருந்த பல்­வேறு நிகழ்ச்­சி­கள் ஏற்­கெ­னவே ரத்து செய்­யப்­பட்­டு­விட்­டன.

ஒலிம்­பிக் சுடரை ஏந்­திச் செல்­லும் ஓட்ட வீரர்­கள் மற்­றும் ஊழி­யர்­க­ளின் உடல்­நி­லை­யும் உடல் வெப்­ப­நி­லை­யும் கண்­கா­ணிக்­கப்­படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

மக்­கள் கூடு­வ­தைத் தவிர்ப்­ப­தற்­காக கிரீ­ஸில் ஒலிம்­பிக் சுடர் ஓட்­டம் ரத்து செய்­யப்­பட்­டது குறிப்­பி­டத்­தக்­கது.

இத­னி­டையே, ஒலிம்­பிக் போட்­டி­க­ளுக்­கான ஆயத்­தப் பணி­கள் தொடர்ந்து இடம்­பெ­றும் என்ற அனைத்­து­லக ஒலிம்­பிக் மன்­றத்­தின் அறி­விப்­பிற்கு பல்­வேறு முன்­னணி விளை­யாட்­டா­ளர்­களும் எதிர்ப்­புத் தெரி­வித்­துள்­ள­னர்.