'சேவாக்கைப் போல் ஆட முடியாது'

'சேவாக்கைப் போல் ஆட முடியாது'

1 mins read
84f6be1b-9e97-41bc-b5af-e661e5361dc9
இந்­திய டெஸ்ட் கிரிக்­கெட் அணி­யின் முக்­கிய வீர­ரா­கத் திகழ்ந்­த­போ­தும் சேத்­தேஸ்­வர் புஜாரா­வால் ஒரு­நாள், டி20 போட்­டி­க­ளுக்­கான அணி­யில் இடம்­பி­டிக்க முடி­யவில்லை. படம்: ஊடகம் -

ராஜ்­கோட்: இந்­திய டெஸ்ட் கிரிக்­கெட் அணி­யின் முக்­கிய வீர­ரா­கத் திகழ்ந்­த­போ­தும் சேத்­தேஸ்­வர் புஜாரா­வால் (படம்) ஒரு­நாள், டி20 போட்­டி­க­ளுக்­கான அணி­யில் இடம்­பி­டிக்க முடி­யவில்லை.

அதற்கு புஜா­ரா­வின் மந்­த­மான பந்­த­டிப்பு வேகமே கார­ணம் எனக் கூறப்­ப­டு­கிறது. அத­னால்­தான், ஐபி­எல் அணி­களும் இவரை ஏலம் எடுப்­ப­தற்­குத் தயா­ராக இல்லை.

ஆனால், தமது பந்தடிப்பு வேகம் குறித்து ஊட­கங்­கள்­தான் பெரி­து­படுத்­து­கின்­றன என்­றும் அணி நிர்­வா­கமோ, சக வீரர்­களோ அதைப் பற்­றிப் பேசு­வதே இல்லை என்றும் சொல்கிறார் 32 வயதான புஜாரா.

"அணி நிர்­வா­கத்­தி­டம் இருந்து எனக்கு எந்த நெருக்­கு­த­லும் இல்லை. எனது ஆட்ட பாணி­யை­யும் அதன் முக்­கி­யத்­து­வத்­தை­யும் அது நன்­றா­கவே அறிந்­து­வைத்­துள்­ளது," என்­கி­றார் இவர்.

"வீரேந்­தர் சேவாக் அல்­லது டேவிட் வார்­ன­ரைப் போல என்­னால் அதி­ர­டி­யாக விளை­யாட முடி­யாது என்­பது எனக்­கும் தெரி­யும். ஆனா­லும், டெஸ்ட் போட்­டி­க­ளைப் பொறுத்­த­மட்­டில் ஓட்­ட­மெ­டுக்­கத் தொடங்க சற்று நேரம் எடுத்­துக்­கொள்­வ­தில் தவ­றில்லை," என்­றும் இவர் குறிப்­பிட்­டார்.