அடுத்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவம் தள்ளிப்போகலாம்

அடுத்த இங்கிலிஷ் பிரிமியர் லீக் பருவம் தள்ளிப்போகலாம்

1 mins read
b0d5c342-2dfd-4f13-9d22-74f3661ce4ab
இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தின் 2020-21 பரு­வம் தாம­த­மா­கத் தொடங்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: இங்­கி­லிஷ் பிரி­மி­யர் லீக் காற்­பந்­தின் 2020-21 பரு­வம் தாம­த­மா­கத் தொடங்­க­லாம் என எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக இங்­கி­லாந்­தில் பிரி­மியர் லீக் உட்­பட அனைத்து காற்­பந்­துப் போட்­டி­களும் ஏப்­ரல் 30ஆம் தேதி வரை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளன. அதன்­பின் மே மாதத்­தில் போட்­டி­கள் மீண்­டும் தொடங்­கும் என நம்­பப்­ப­டு­கிறது. அப்­ப­டித் தொடங்­கி­னா­லும் போட்­டி­கள் பார்­வை­யா­ளர்­கள் இன்றி, மூடிய அரங்­கு­களில் விளை­யா­டப்­ப­ட­லாம்.

எ­ஃப்ஏ கிண்­ணப் போட்­டி­களும் காலி­று­தி­யு­டன் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. அத்­து­டன், இந்­தப் பரு­வத்­தில் பிரி­மி­யர் லீக்­கை­விட்டு வெளி­யே­றப் போகும் குழுக்­கள் எவை (ரெலி­கே­ஷன்), அடுத்த பரு­வத்­தில் இடம்­பெ­றப்­போ­கும் புதிய குழுக்­கள் எவை (புரொ­மோ­ஷன்) போன்­ற­வை­யும் தீர்­மா­னிக்­கப்­பட வேண்­டி­ உள்ளன.

இத்­த­கைய சூழ­லில், இந்­தப் பருவ ஆட்­டங்­கள் முழு­மை­யாக முடி­வ­டை­யும் வரை அடுத்த பரு­வத்­தைத் தொடங்க முடி­யாது என்­பதை எ­ஃப்ஏ, பிரி­மி­யர் லீக், இங்கிலிஷ் காற்­பந்து லீக் ஆகிய அமைப்­பு­கள் உணர்ந்­துள்­ளன.

இதன் கார­ண­மாக, ஜூன் 1ஆம் தேதிக்­குள் 2019-20 காற்­பந்­துப் பரு­வம் நிறை­வு­பெற வேண்­டும் என்ற காலக்­கெடு, கால வரம்­பின்றி நீட்­டிக்­கப்­பட்டு இருக்­கிறது.

அத்­து­டன், கிரு­மித்­தொற்று கார­ண­மாக அடுத்த பரு­வம் தாம­த­மா­கத் தொடங்­க­லாம் என்­ப­தை­யும் அந்த மூன்று அமைப்­பு­களும் ஏற்­றுக்­கொண்­டுள்­ளன என்று நம்­பத்­தகுந்த வட்­டா­ரங்­கள் கூறி­ய­தாக 'ஈஎஸ்­பி­என்' செய்தி வெளி­யிட்­டு உள்­ளது.