பிரிட்டனில் கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தம்

1 mins read

லண்­டன்: கொவிட்-19 கிரு­மித்­தொற்று கார­ண­மாக மே 28ஆம் தேதி வரை இங்­கி­லாந்து, வேல்ஸ் நாடு­களில் தொழில்­முறை கிரிக்­கெட் போட்­டி­கள் விளை­யா­டப்­படாது என இங்­கி­லாந்து, வேல்ஸ் கிரிக்­கெட் வாரி­யம் அறி­வித்­து இருக்கிறது.

அதன்­பின் ஜூன், ஜூலை அல்­லது ஆகஸ்ட் மாதத்­தில் கிரிக்­கெட் போட்­டி­க­ளைத் தொடங்­கு­வது தொடர்­பில் பல்­வேறு தெரி­வு­களை ஆராய்ந்து வரு­வ­தாக இங்­கி­லாந்து, வேல்ஸ் கிரிக்­கெட் வாரி­யம் தெரி­வித்­துள்­ளது. பெரும்­பா­லும், முன்­னர் திட்­ட­மிட்­ட­படி ஜூன் மாதத்­தி­லேயே வெஸ்ட் இண்­டீஸ் அணிக்கு எதி­ரான மூன்று போட்­டி­கள் கொண்ட டெஸ்ட் தொடர், 'டி20 பிளாஸ்ட்' போட்­டி­கள் ஆகி­ய­வற்றை நடத்த முயற்சி மேற்­கொள்­ளப்­படும் என வாரி­யம் குறிப்­பிட்­டுள்­ளது.

ஆயி­னும், பிரிட்­ட­னில் ஜூன் மாதத்­தில்­தான் கொரோனா கிரு­மித்­தொற்று உச்­சத்தை எட்­டும் என அந்­நாட்டு அரசு கணித்­துள்­ள­தால் ஜூன் மாதத்­தில் அங்கு கிரிக்­கெட் போட்­டி­க­ளைத் தொடங்­கச் சாத்­தி­ய­மில்லை எனக் கூறப்­ப­டு­கிறது.

"நாடு தற்­போது எதிர்­கொண்­டுள்ள சூழ­லைப் பார்க்­கும்­போது, கிரிக்­கெட் பரு­வத்­தைத் தாம­திப்­பது மிக­வும் அவ­சி­ய­மான நட­வடிக்கை," என்­றார் வாரி­யத்­தின் தலைமை நிர்­வாக அதி­காரி டாம் ஹாரி­சன்.

தற்­கா­லி­கத் தடைக்­கா­லம் முடிந்த பின்­னர் பொரு­ளி­யல் ரீதி­யாக முக்­கி­யத்­து­வம் வாய்ந்த அனைத்­து­லக, உள்­ளூர் போட்­டி­களை­ ந­டத்­து­வ­தற்கு அதிக முன்­னு­ரிமை அளிக்­கப்­படும் என்று அவர் குறிப்­பிட்­டார்.

நேற்று முன்­தி­னம் வெள்­ளிக்­கி­ழமை இரவு முதல் நாட்­டி­லுள்ள அனைத்து காப்­பிக் கடை­கள், மதுக்­கூ­டங்­கள், உண­வ­கங்­களை மூடும்­படி பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் உத்­த­ர­விட்­டுள்­ளார். உண­வு­களை வாங்­கிச் செல்ல மட்­டும் அனு­மதி அளிக்­கப்­பட்­டுள்­ளது.