சீன காற்பந்து ஆட்டக்காரருக்குக் கிருமித்தொற்று

சீன காற்பந்து ஆட்டக்காரருக்குக் கிருமித்தொற்று

1 mins read

பார்­சி­லோனா: ஸ்பெ­யி­னின் எஸ்­பேன்­யோல் காற்­பந்­துக் குழு­விற்­காக விளை­யாடி வரும் சீனா­வின் வூ லெய் எனும் ஆட்­டக்­கா­ரர் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ளார். தற்­போது அவர் பார்­சி­லோ­னா­வில் உள்ள தனது வீட்­டில் தன்­னைத்­தானே தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்டு இருப்­ப­தாக ஸின்­ஹுவா செய்தி தெரி­விக்­கிறது.

கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்ள முதல் தொழில்­முறை சீனக் காற்­பந்து ஆட்­டக்­கா­ரர் லெய்­தான்.

கிருமி தொற்­றி­ய­தற்­கான இலே­சான அறி­கு­றி­கள் லெய்­யி­டம் தென்­ப­டு­வ­தா­கக் கூறப்படுகிறது.

தனது குழு­வி­ன­ரில் அறு­வ­ருக்­குக் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ள­தா­கக் கடந்த புதன்­கி­ழமை உறு­திப்­ப­டுத்­திய எஸ்­பேன்­யோல் குழு நிர்­வா­கம், அதே நேரத்­தில் அவர்­களின் பெயர்­களை வெளி­யிட மறுத்து­விட்­டது.

மற்­றொரு ஸ்பா­னிய காற்­பந்­துக் குழு­வான வெலன்­சி­யா­வில் மூவ­ரில் ஒரு­வரை கிருமி தொற்­றி­யுள்­ளது. அதே­போல, ஆல­வேஸ் குழு­வி­லும் 15 பேர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அடுத்த மாதம் 4ஆம் தேதி வரை ஸ்பா­னிய லீக் காற்­பந்­துப் போட்­டி­கள் தற்­கா­லி­க­மாக நிறுத்தி வைக்­கப்­பட்டிருப்பது குறிப்பிடத் தக்கது.