ரோம்: இத்தாலியின் ஏஎஸ் ரோமா காற்பந்துக் குழுவினர் தங்களது ஒருநாள் ஊதியத்தை நன்கொடையாக அளித்துள்ளனர். அதைக் கொண்டு ரோமில் உள்ள ஒரு மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எட்டுப் படுக்கைகளும் மூன்று காற்றோட்டச் சாதனங்களும் வாங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இத்தாலியை கொரோனா கிருமி ஆட்டிப்படைத்து வரும் நிலையில், கடந்த வியாழக்கிழமையில் இருந்து ரோமா குழு நிதிதிரட்டு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

