மட்ரிட்: ஐரோப்பிய நாடுகளில் இத்தாலிக்கு அடுத்தபடியாக ஸ்பெயின் மற்றும் பிரான்சில் கொரோனா கிருமியின் தாக்கம் அதிகமாக உள்ளது.
ஸ்பெயின் நாட்டின் முன்னணி காற்பந்து கிளப் அணி ரியால் மாட்ரிட். இந்த அணியின் முன்னாள் உரிமையாளர் லொரென்ஸோ சான்ஸ் (படம்).
76 வயதான இவர் கடந்த செவ்வாய்க்கிழமை உடல்நலக்குறைவால் மருத்துவதுமனையில் சேர்க்கப்பட்டார். அவர் உடல்நலக்குறைவால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அவர் கொரோனா கிருமித் தாக்குதலுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, இப்போது உயிரிழந்ததாக உள்ளூர் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
லொரென்ஸோ சான்ஸ் 1995 முதல் 2000 வரை ரியால் மாட்ரிட் காற்பந்து அணியின் உரிமையாளராக இருந்தார்.
அப்போது ரியால் மட்ரிட் இரண்டு முறை சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தைக் கைப்பற்றியிருந்தது. ஒரு முறை லா லிகாவை வென்றிருந்தது.

