இங்கிலாந்தில் மே கடைசி வரை கிரிக்கெட்டுக்கு தடை

1 mins read

லண்­டன்: இங்­கி­லாந்­தில் கொரோனா கிருமி வேக­மா­கப் பரவி வரு­கிறது. அங்கு உயி­ர் ­இழப்­பு ஏற்­பட்டு பலர் பாதிக்­கப்­பட்டு வரு­கி­றார்­கள்.

இதை­ய­டுத்து இங்­கி­லாந்­தில் பல்­வேறு கட்­டுப்­பா­டு­கள் விதிக்­கப்­பட்டு உள்­ளன. காற்­பந்­துப் போட்­டி­கள் நிறுத்­தப்­பட்­டுள்­ளன.

இந்த நிலை­யில் இங்­கி­லாந்து கிக்­கெட் வாரி­ய­மும் கொனோரா கிருமித் தொற்று கார­ண­மாக கிரிக்­கெட் போட்­டி­களை நடத்த வேண்­டாம் என்று முடிவு செய்து இருக்­கிறது. இதை­ய­டுத்து இங்­கி­லாந்­தில் உள்­ளூர் கிரிக்­கெட் உள்­ளிட்ட எந்த போட்­டி­யை­யும் மே 28ஆம் தேதி வரை நடத்த வேண்­டாம் என்று உத்­த­ர­விட்­டுள்­ளது. கவுண்டி கிரிக்­கெட் போட்டி தொடர் 7 வாரங்­க­ளுக்கு தள்ளி வைக்­கப்­பட்­டுள்­ளது.