பெய்ஜிங்: எவர்ட்டன், மான்செஸ்டர் யுனைடெட் காற்பந்துக் குழுக்களின் முன்னாள் ஆட்டக்காரரும் இப்போது ஷேண்டோங் லுனெங் எனும் சீனக் குழுவிற்காக விளையாடி வருபவருமான மருவான் ஃபெலைனி, 32 (படம்), கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். சீன சூப்பர் லீக் விளையாட்டாளர்களில் கிருமி தொற்றிய முதலாமவர் இவர்தான். பெல்ஜியத்தைச் சேர்ந்த இவரது உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக லுனெங் குழு தெரிவித்துள்ளது. பௌலோ டிபாலா (யுவென்டஸ்), ஹட்சன் ஒடோய் (செல்சி) ஆகிய முன்னணி காற்பந்து வீரர்களையும் கிருமி தொற்றியுள்ளது.
முன்னாள் மேன்யூ வீரருக்குத் தொற்று
1 mins read
ஷேண்டோங் லுனெங் எனும் சீனக் குழுவிற்காக விளையாடி வருபவருமான மருவான் ஃபெலைனி (32) கொரோனா கிருமித் தொற்றால் பாதிக்கப்பட்டார். இப்போது இவரது உடல் நிலை சீராக உள்ளது என சீனக் காற்பந்துக்குழு தெரிவித்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

