கூட்டத்தை ரத்து செய்த பிசிசிஐ: ஐபிஎல் போட்டிகள் நடப்பது கேள்விக்குறி

புது­டெல்லி: ஏற்­கெ­னவே அடுத்த மாதம் 15ஆம் தேதி வரை இந்­திய பிரி­மியர் லீக் (ஐபி­எல்) டி20 கிரிக்­கெட் போட்­டி­கள் தள்­ளி­வைக்­கப்­பட்ட நிலை­யில், இப்­போது அந்தத் தொடர் நடப்பதே கேள்­விக்­கு­றி­யாகி இருக்கிறது.

கொரோனா கிரு­மித்­தொற்­றைக் கட்­டுப்­ப­டுத்­தும் நோக்­கில் இந்­தியா இம்­மா­தம் 31ஆம் தேதி வரை கிட்­டத்­தட்ட முடங்­கி­யி­ருக்­கும். இந்த நிலை­யில், எட்டு ஐபி­எல் அணி உரி­மை­யா­ளர்­க­ளு­டன் காணொளி மூலம் நடத்­து­வ­தாக இருந்த கூட்­டத்தை இந்­திய கிரிக்­கெட் கட்­டுப்­பாட்டு வாரி­யம் (பிசி­சிஐ) நேற்று ரத்து செய்­து­விட்­டது.

“மனி­த­நே­யத்­திற்கே முத­லி­டம், மற்­றவை எல்­லாம் அடுத்­து­தான். நிலைமை மேம்­ப­டாத வரை ஐபி­எல் போட்­டி­க­ளைப் பற்றி பேசு­வ­தில் அர்த்­த­மில்லை. ஐபி­எல் போட்­டி­கள் நடக்­கா­மல் போனால் என்ன, அப்­ப­டியே இருந்­து­விட்­டுப் போகட்­டுமே!” என்றார் கிங்ஸ் லெவன் பஞ்­சாப் அணி­யின் உரி­மை­யா­ளர்­க­ளுள் ஒரு­வ­ரான நெஸ் வாடியா.

“அர­சாங்­கம் உறு­தி­யான நட­வடிக்­கை­களை எடுத்து வரு­கிறது. இந்­தி­யா­வைப் போன்ற பெரிய நாடு அனைத்து விமா­னங்­க­ளை­யும் ரத்து செய்­தி­ருப்­பது மிகப் பெரிய, முன்­னோக்­கிய நட­வ­டிக்கை,” என்­றும் அவர் குறிப்­பிட்­டார்.

“இப்­போ­தைய சூழ­லில், ஐபி­எல் போட்­டி­க­ளைப் பற்றி நினைத்­துப் பார்க்­கவே முடி­ய­வில்லை. அதைப் பற்றி நினைப்­ப­தும் பொருத்­த­மாக இராது. மூன்­றாம் உல­கப் போரைப் போன்ற சூழல் நிலவும்போது, நம் வாழ்க்­கை­யைப் பற்­றி­யும் அடுத்­த­வர்­க­ளுக்கு உத­வு­வ­தைப் பற்­றி­யும் நினைப்­பதே பொருத்­த­மா­ன­தாக இருக்­கும்,” என்­றார் பெயர் வெளி­யிட விரும்­பாத இன்­னோர் ஐபி­எல் அணி­யின் உரி­மை­யா­ளர்.

உல­கின் முன்­னணி கிரிக்­கெட் நட்சத்திரங்கள் பல­ரும் பங்­கு­பெறும் ஐபி­எல் போட்­டி­கள் இம்­மா­தம் 29ஆம் தேதி மும்­பை­யில் தொடங்­கு­வ­தாக இருந்­தது. ஆனால், கிரு­மித்­தொற்று உலகை ஆட்­டிப் படைத்து வரும் நிலை­யில் ஐபி­எல் போட்­டி­கள் ரத்­தா­க­லாம் என்றே தெரி­கிறது.

இருப்­பி­னும், நிலைமை விரை­வில் சீர­டை­ய­லாம் என்ற நம்­பிக்­கை­யு­டன் இருப்­ப­தால் ஐபி­எல் போட்­டி­கள் தொடர்­பில் பிசி­சிஐ எந்த ஓர் அறி­விப்­பை­யும் வெளி­யி­டா­மல் காலந்­தாழ்த்தி வரு­கிறது.

“ஒலிம்­பிக் போட்­டி­க­ளையே ஓராண்­டிற்­குத் தள்­ளிப்­போட முடி­யும் எனில், அதை ஒப்­பு­நோக்­கும்­போது ஐபி­எல் மிகச் சிறிய போட்டித் தொடர்­தான். அதை நடத்­து­வது நாளுக்கு நாள் சிக்­க­லாகி வரு­கிறது. இந்த நேரத்­தில், வெளி­நாட்­ட­வர்­க­ளுக்கு விசா வழங்­கு­வது குறித்து அர­சாங்­கம் யோசிக்­கவே செய்­யாது,” என்று பிசி­சிஐ அதி­காரி ஒரு­வ­ர் சொன்னதாக ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ செய்தி கூறியது.

இப்­போ­தைக்கு, வருமான இழப்­பைக் குறைப்­பது தொடர்­பில் காப்­பு­றுதி, ஒளி­ப­ரப்பு நிறு­வ­னங்­க­ளு­டன் அணி உரி­மை­யா­ளர்­கள் ஆலோ­சித்து வரு­கின்றனர்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!